Home
News

2025-க்கு ஒரே ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கு வாய்ஸ், டேட்டா.. மாசம் ரூ.333-க்கு இறக்கிய அம்பானி.. Jio-வுக்கு குஷி!

இனிமேல் ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் திட்டங்கள் வேண்டாம், ஒரே ப்ரீபெய்ட் திட்டத்தில் வருடம் முழுவதும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எஸ்எம் மற்றும் ஓடிடி வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படி ஒரு ஜியோ வருடாந்திர திட்டம் (Jio Yearly Plan) இருக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.333 செலவில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்களை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த ஜியோ திட்டத்தின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மாதத்துக்கு ரூ.333 செலவில் கிடைக்கிறது என்றால், 12 மாதங்களுக்கு ரூ.3999ஆக விலை இருக்கிறது. இந்த விலைக்கே திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஏனென்றால், வருடாந்திர வேலிடிட்டியில் ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது, மாதத்துக்கு ஏற்படும் செலவு குறைவாக இருக்கிறது. இதனாலேயே மாதத்துக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது.

2025-க்கு ஒரே ரீசார்ஜ்! 365 நாட்களுக்கு வாய்ஸ், டேட்டா.. மாசம் ரூ.333!

ஜியோ ரூ 3999 திட்ட விவரங்கள் (Jio Rs 3999 Plan Details): இந்த ஒரே திட்டத்தில் வருடம் முழுவதும் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), ஓடிடி (OTT) சலுகைகளை குறையில்லாமல் பயன்படுத்தலாம். சொல்லப்போனால், ஜியோ நிறுவனத்தின் அதிகப்படியான விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. அப்படியென்றால், சலுகைகள் குறைவாகவா இருக்கும்.

இந்த வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 365 நாட்கள் முழுவதும் வரம்பு இல்லாமல் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைகளுக்கு பிறகு போஸ்ட் டேட்டா உள்ளது.

அதாவது, 2.5 ஜிபி டேட்டாவை அந்த நாள் முடியும் முன்பே பயன்படுத்திவிட்டால், உங்களுக்கு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, 5ஜி டேட்டாவும் சரி, 4ஜி டேட்டாவும் சரி அதிகப்படியாகவே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், கூடுதல் டேட்டாவுக்கு எந்தவொரு வவுச்சரையும் ரீசார்ஜ் செய்ய வேண்டியது கிடையாது.

இப்போது மற்ற சலுகைகளுக்கு வருவோம். இந்த ஜியோ திட்டத்தில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஆகவே, டேட்டாவும் வாய்ஸ் கால்களும் எப்போதும் குறையாது. எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கமாக கிடைக்கும்படி நாளொன்றுக்கு 100 கணக்கில் வருகிறது.

ஓடிடி சலுகைகளை பார்க்கையில், ஃபேன்கோட் (FanCode) சலுகை வருகிறது. ஆகவே, கிரிக்கெட் பிரியர்களுக்கு இந்த சலுகை பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. மேலும், பிரீமியம் சலுகைகளை கொடுக்காத ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய சலுகைகள் கிடைக்கிறது. மேலும், ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

இதேபோல மற்றொரு வருடாந்திர திட்டம் இருக்கிறது. ஆனால், அதில் ஓடிடி சலுகை மட்டும் கிடைக்காது. மற்ற சலுகைகள் ஒன்று போலவே இருக்கிறது. ஆகவே, அந்த திட்டத்திலும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு பஞ்சமிருக்காது. வருடாந்திர வேலிடிட்டியில் இந்த திட்டம் மட்டுமே ஆரம்ப விலைக்கு தொடங்குகிறது. இதன் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த திட்டத்தின் விலை ரூ.3599ஆக இருக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே 2.5 ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு கொடுக்கிறது. அதேபோல வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. ஓடிடி சலுகை கிடையாது. இருப்பினும், ஜியோ சினிமா, ஜியோ டிவி சந்தாக்களை பயன்படுத்த முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3999 Plan With 365 Days Validity Unlimited Voice Calls OTT Subscription Check Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X