Home
News

2026 நியூ இயர்.. மாதம் ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. கோல்டு, வாய்ஸ் கால்கள், டேட்டா.. ஓடிடி சந்தா!

2026 ஆம் ஆண்டு நியூ இயருக்கு மாதம் ரூ.333 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், ஓடிடி சந்தா சலுகைகள் மட்டுமல்லாமல், ஜியோ கோல்டு (Jio Gold) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த வருடாந்திர திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளுக்கு பெரிய லிஸ்ட் தேவைப்படுகிறது. முழு சலுகை விவரங்களை பார்ப்போம்.

ஜியோ நிறுவனத்தின் கஸ்டமர்களில் பலர் ஆண்டின் இறுதியில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர். ஏனென்றால், புது வருடத்தில் ரீசார்ஜ் விலை உயர்ந்தாலும், இப்போது இருக்கும் விலையிலேயே வருடம் முழுவதும் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இவர்களுக்கான திட்டமாகவே இது இருக்கிறது.

2026 நியூ இயர்.. மாதம் ரூ.333 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. கோல்டு

ஜியோ ரூ. 3999 திட்ட விவரங்கள் (Jio Rs 3999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 2.5 ஜிபி டேட்டா தினசரிக்கு கிடைக்கிறது. 365 நாட்கள் முழுவதும் இந்த டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும்.

வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கும். இந்த சலுகைகளுடன் ஜியோ டிவி (Jio TV), பேன்கோட் (FanCode) மற்றும் ஜியோ ஏஐகிளவுட் (Jio AICloud), கிடைக்கும். இந்த சலுகைகள் 365 நாட்கள் முழுவதுக்கும் கிடைக்கும். மேலும், சலுகைகள் கிடைக்கின்றன.

1. ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance) ஆப்பில் ஜியோ கோல்டு வாங்கினால், அந்த கஸ்டமர்களுக்கு 1 சதவீத டிஜிட்டல் கோல்டு இலவமாக கொடுக்கப்படும். ஆகவே, ரூ.1,000 விலைக்கு கோல்டு வாங்கினால், ரூ.10 மதிப்பில் டிஜிட்டல் கோல்டு இலவமாக கிடைக்கும். 91-8010000524 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இந்த கோல்டு சலுகையை பெற்று கொள்ளலாம்.

2. ஜியோஹோம் (JioHome) கனெக்சன் 2 மாதங்களுக்கு இலவமாக கிடைக்கும். இது புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதே நேரத்தில் லைவ் டிவி சேனல்கள், பிரீமியம் ஓடிடி ஆப்கள் மற்றும் ஃபைபர் டேட்டா சலுகைகளும் கிடைக்கும். மேலும், வை-பை வழியாக அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம்.

3. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா மூன்று மாதங்களுக்கு இலவமாக கிடைக்கும். இந்த சந்தாவை மொபைல் மற்றும் டிவிகளில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தவுடன் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா தொடங்கப்பட்டுவிடும். இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, முதல் 90 நாட்களுக்கு இந்த சந்தா கிடைக்கும்.

4. ஜியோ ஏஐ கிளவுட் சலுகை வழியாக 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். கூகுள் நிறுவனத்தின் டிரைவ் போல இதை பயன்படுத்தலாம். ஆனால், இதற்கு ஜியோ மொபைல் நம்பர் கட்டாயம். ஜியோ கிளவுட் ஆப் வழியாக இதை பயன்படுத்தி கொள்ளலாம். எந்த நம்பரில் ரீசார்ஜ் செய்யப்படுகிறதோ அதே நம்பருக்கு இந்த கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும்.

5. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படும். இந்த சந்தா திட்டத்தின் வேலிடிட்டியை விட கூடுதலாக கிடைக்கும். அதாவது, 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த அனைத்து சலுகைகளும் மாதத்துக்கு ரூ.333 செலவில் கிடைக்கின்றன. ரூ.3999 விலையை 12 மாதங்களுக்கு பிரித்தால், இந்த விலை மட்டுமே வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3999 Plan Voice Calls Daily Data 365 Days Validity Yearly Recharge For New Year 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X