2026 முழுக்க முடிஞ்சு.. Jio க்கு விலை உயர்ந்த ரீசார்ஜ்.. மாதம் ரூ.333 க்கு 365 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் விலை உயர்ந்த ரீசார்ஜ் திட்டமாக ரூ.3,999 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தை பல கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாமல் போனாலும், அதன் சலுகைகளை பார்த்தால் 2026 நாட்கள் முழுக்க ரீசார்ஜ் தொல்லை முடிந்துவிடுமோ என்று எண்ண வைத்துவிடும்.
2025 ஆம் ஆண்டில் கிடைத்த அதே விலையிலேயே இந்த ரூ.3,999 திட்டம் வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு தொடக்கத்தில் கிடைத்ததை போல இருக்காது. எக்கச்சக்கமான சலுகைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் கால்கள், டேட்டா, ஓடிடி போக கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சலுகைகளையும் கொடுத்துள்ளது.

ஜியோ ரூ. 3999 திட்ட விவரங்கள் (Jio Rs 3999 Plan Details): 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்துக்கு மாத செலவு ரூ.333 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 12 மாதங்கள் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவையும் கொண்டுள்ளது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கொடுத்துள்ளது.
365 நாட்களுக்கு 912.5 ஜிபி டேட்டா கிடைக்கும். 4ஜி வேகத்தில் இந்த டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வருடம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. ஆகவே, 4ஜி வேகத்தில் கிடைக்கும் டேட்டாவை போல அன்லிமிடெட் சலுகையில் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
இதை 365 நாட்கள் முழுவதும் செய்து கொள்ளலாம். மேலும், ஃபேன் கோட் (FanCode) ஓடிடி சந்தாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த ஓடிடிக்கும் 365 நாட்கள் சந்தா கிடைக்கும். ஜியோ டிவி (JioTV) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். இந்த சலுகைகளுடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா (JioHotstar Mobile / TV Subscription) கொடுக்கப்படுகிறது.
இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால், 2 மாதங்களுக்கு கொடுக்கப்படும் ஜியோஹோம் (JioHome) சலுகையில் கிடைக்கும் ஓடிடி சந்தாவை டிவியிலும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வை-பை டேட்டா சலுகையும், லைவ் டிவி சேனல்களின் சலுகையும் இந்த ஜியோஹோம் சந்தாவில் கிடைக்கும். இதை 2 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
இதை பெறுவதற்கு ஜியோ ஆப் அல்லது ஜியோ வெப்சைட் வழியாக புக்கிங் செய்ய வேண்டும். இந்த சலுகைக்கு அடுத்ததாக ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) சலுகை கிடைத்துள்ளது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இதை ஜியோ மொபைல் நம்பர் வழியாக ஜியோ கிளவுட் ஆப்பில் லாகின் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளுடன் ஜெமினி ப்ரோ சந்தா உள்ளது.
இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். ஆகவே, 12 மாதங்களுக்கு கிடைக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடிந்தாலும் கூடுதலாக ஜெமினி ப்ரோ சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஒட்டுமொத்த சலுகைகளையும் கொண்ட ஜியோ ரூ.3,999 திட்டமே 2026 ஆம் ஆண்டில் விலை உயர்ந்த ரீசார்ஜ் திட்டமாக இருக்கிறது. இதற்கு கீழாக ரூ.3,599 திட்டம் உள்ளது.
இதிலும் 365 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோஹாட்ஸ்டார், ஜியோஹோம், ஜியோ ஏஐ கிளவுட் சலுகையும் கிடைக்கும். ஆனால், முந்தைய திட்டத்தில் கிடைக்க பேன்கோட் ஓடிடி சந்தா மட்டும் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








