Jio சிம் குடுங்க சாமி.. கஸ்டமர்களுக்கு டபுள் ட்ரீட்டில் 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள், டேட்டா, OTT!
ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக டெலிகாம் மார்கெட்டில் பேசப்படுகின்றன. இதனால், இப்போதே 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்துவைத்தால், தொடர்ந்து பழைய விலையிலேயே பெற்று கொள்ள முடியும். எந்தெந்த திட்டங்களில் டேட்டாவுடன் வருடாந்திர வேலிடிட்டி கிடைக்கிறது?
டேட்டா, வாஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகளுடன் 2 வருடாந்திர திட்டங்கள் ஜியோ நிறுவனத்தில் கிடைக்கின்றன. ஒரு ரூ.3,599 விலைக்கும் மற்றொன்று ரூ.3,999 விலைக்கும் கிடைக்கின்றன. இதில் கூடுதல் சலுகைகளும் இருக்கின்றன. இப்போது, விஷயத்துக்கு வருவோம். என்னென்ன சலுகைகள் என்பதை பார்ப்போம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 Prepaid Plan): 365 நாட்களாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி இருக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் 2.5 ஜிபி டேட்டா தினசரிக்கு வழங்குகிறது. மொத்தமாக 912.5 ஜிபி டேட்டாவை இந்த ரூ.3,599 திட்டம் கொடுக்கிறது.
2.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த 4ஜி டேட்டாவையும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கொடுத்தாலும், லம்ப்-சம் டேட்டாவை விரும்பும் கஸ்டமர்களுக்கு 120 ஜிபி டேட்டாவை கொடுத்து இருக்கிறது. இதை மொத்தமாக பயன்படுத்த முடியாது.
ஒவ்வொரு மாதமும் 10 ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்தி கொள்ளலாம். வழக்கம்போல 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. ஓடிடி சலுகைகளை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. மேலும், ஜியோ டிவி ப்ரோ பேக் (JioTV Pro Pack) கிடைக்கிறது.
இதில் ஜியோ டிவி (JioTV) வழியாக லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். இதில் 12 மாதங்களுக்கு தலா ரூ.55 மதிப்பிலான வவுச்சர் கொடுக்கப்படும். இதில் 1000+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) சலுகை மற்றும் கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை 18 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
இதில் 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. நானோ பனானா கிடைக்கிறது. ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) வவுச்சர், அஜியோ (AJIO) வவுச்சர் மற்றும் சினிபொலிஸ் (Cinépolis) வவுச்சர் கிடைக்கின்றன. இந்த வவுச்சர்களை மைஜியோ ஆப் வழியாக கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது, அடுத்த திட்டத்தை பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3999 Prepaid Plan): 365 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. இதிலும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சந்தா கிடைக்கிறது. ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. 12 மாதங்களுக்கு கேன்வா ப்ரோ லைட் சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.1590 மதிப்புள்ள இந்த சந்தாவை இலவசமாக பெற்று கொள்ளலாம். கூடுதலாக பேன் கோட் ஓடிடி சந்தாவையும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications
