தெறிக்கவிட்ட ஜியோ.. கம்மி விலையில் தினமும் 3ஜிபி டேட்டா.. ஓடிடி.. Extra டேட்டா.. எந்த திட்டம்?
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய புதிய திட்டங்கள் மற்றும் எக்கச்சக்க சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜியோ நிறுவனம் மிகவும் கம்மி விலையில் ஒடிடி, தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் எக்ஸ்ட்ரா டேட்டா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கி உள்ளது. அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் அதிக நன்மைகள் கிடைக்கிறது. இப்போது இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் ( extra free data) கிடைக்கும். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம். குறிபாக ஜியோ சினிமா மூலம் உங்கள் மொபைலில் உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றை பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.399 ப்ரீபெயட் திட்டத்தில் அனைத்து சலுகைகளும் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் ஜியோ நிறுவனம் வழங்கும் சில அசத்தலான பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 598 prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும். மேலும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) சந்தாவை வழங்குகிறது ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.758 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 758 prepaid Plan) ஆனது மொத்தமாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.
ஜியோ ரூ.808 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 808 prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகலும் ஜியோ ஜியோ ரூ.808 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








