ஜியோ சிம் இருக்கா? கம்மி விலையில் தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எவ்வளவு நாள் வேலிடிட்டி?
ஏர்டெல் (Airtel), VI நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ (Jio) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றே கூறலாம். சமீபத்தில் கூட வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம்.
அதேபோல் ஜியோ நிறுவனம் கம்மி விலையில் தினமும் 2.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ஒரு திட்டத்தை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 prepaid plan) தான் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும்
என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
அதன்படி அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும். குறிப்பாக ஜியோ பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
ஒருவேளை இதைவிட அதிக டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை எதிர்பார்க்கும் ஜியோ பயனர்கள் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதாவது அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








