Home
News

அதான் அம்பானி.. ரூ.399 போதும்.. தினமும் 2.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 90 நாட்களுக்கு ஓடிடி சந்தா!

மலிவான விலைக்கு அதிகபட்ச டேட்டா சலுகை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் மட்டுமே கொடுக்கிறது. ஒரு நாளுக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், இப்போது ஓடிடி சலுகையையும் சேர்த்துள்ளது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை பார்த்துவிட்டு, 2.5 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தை பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களே அதிகபட்ச டேட்டாவை கொடுக்கும் திட்டங்களாக இருக்கின்றன. ரூ 399 முதல் ரூ 3,999 வரையில் ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கின்றன. ஆகவே, ரூ 399 விலையில் தொடங்கும் திட்டம் மட்டுமே மலிவான விலைக்கு 2.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இதில் மற்ற சலுகைகளும் லாபமாகவே இருக்கிறது.

அதான் அம்பானி.. ரூ.399 போதும்.. தினமும் 2.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட்!

ஜியோ ரூ 399 ப்ரீபெய்ட் திட்ட சலுகைகள் (Jio Rs 399 Prepaid Plan Offer): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) பயன்படுத்த கிடைக்கிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் (Post Data) இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்தமாகவே டேட்டாவில் அதிகபட்ச சலுகைகளை கொடுக்கிறது.

மற்ற சலுகைகளை பார்க்கையில், டேட்டாவை போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகைகள் கிடைக்கின்றன. ஏற்கனவே, கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளுடன் இப்போது ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தாவும் இலவசமாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 போட்டிகள் ஜியோஹாட்ஸ்டாரில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படுவதாலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியுடன் ஜியோசினிமா ஓடிடி இணைக்கப்பட்டதாலும் இந்த இலவச சலுகையை ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. ஆனால், ஒரு முறை மட்டுமே இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக பெற முடியும். அதற்கு பிறகு சந்தா செலுத்தி பெற வேண்டும்.

இந்த அதிகபட்ச டேட்டா திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. சொல்லப்போனால், 28 நாட்கள் வேலிடிட்டியிலும் அதிக டேட்டா கொண்ட திட்டமாகவும் இது மட்டுமே இருக்கிறது. இந்த சலுகைகளே கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு அதிக டேட்டா கொண்ட திட்டம் வேண்டுமானால், இதை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதற்கு அடுத்து 2.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டம் வேண்டுமானால், 200 நாட்கள் அல்லது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும். இந்த வேலிடிட்டிக்கு ஏற்ப அந்த திட்டங்களின் விலையும் அதிகமாக இருக்கும். முதலில் 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, 2025ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு கஸ்டமர்களுக்கு கொடுக்கப்பட்டதால் விலையும் ரூ.2025ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலைக்கு 200 நாட்கள் வேலிடிட்டியுடன் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை கொடுக்கிறது. இதற்கு அடுத்து 365 நாட்கள் திட்டம் வருகிறது.

ஆகவே, ஜியோ ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ஜியோ ரூ 3999 ப்ரீபெய்ட் திட்டம் ஆகியவற்றில் எதை ரீசார்ஜ் செய்தாலும் உங்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள், 5ஜி டேட்டா சலுகைகள் கிடைக்கும். ரூ.3999 திட்டத்தில் மட்டும் கூடுதலாக ஃபேன்கோட் ஓடிடி சந்தா கொடுக்கப்படும். இதில் பெஸ்ட்டை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Rs 399 Prepaid Plan Offer 70GB Data Unlimited Voice Calls Check Cheapest Maximum Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X