Home
News

ஜியோ குஷி.. வெறும் ரூ.399 போதும்.. பேமிலி சிம் கனெக்சன்.. அன்லிமிடெட் 5G சேவை.. 75GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

வெறும் ரூ.399 விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 75 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல் ஃபேமிலி சிம் கனெக்சன் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளை கொடுக்கும் ஜியோவின் (Jio) போஸ்ட்பெஸ்ட் திட்டத்தை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 399 Postpaid Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஃபேமிலி சிம் கனெக்சன் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஒரு பிரைமரி சிம் கார்டு மட்டுமல்லாமல், கூடுதலாக 3 சிம் கார்டுகளை இணைந்துக்கொள்ளலாம்.

வெறும் ரூ.399 போதும்.. பேமிலி சிம் கனெக்சன்.. அன்லிமிடெட் 5G சேவை!

இந்த திட்டத்தில் 75 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த 75 ஜிபி டேட்டாவுக்கு பிறகு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ஜிபிக்கும் ரூ 10 வசூலிக்கப்படும். இந்த சலுகைகள் பிரைமரி சிம் கார்டுக்கு வழங்கப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் கூடுதலாக ஃபேமிலி சிம் கார்டுகளை இணைத்தால், ஒவ்வொரு சிம் கார்டுக்கும் கூடுதலாக ரூ 99 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 3 சிம் கார்டுகளை இணைத்துக் கொள்ள முடியும். ஆகவே, இந்த திட்டத்தில் இணைக்கும் சிம் கார்டுக்கு 5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும். அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை செய்துகொள்ள முடியும்.

அதாவது, ரூ 399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஒரு பிரைமரி சிம் கார்டுடன் மூன்று கூடுதல் சிம் கார்டுகளை இணைக்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு சிம் கார்டுக்கும் ரூ 99 வீதம் மொத்தம் ரூ 297 கூடுதலாக பணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால், மொத்தமாக 4 சிம் கார்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.

அதோடு ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும். இந்த சலுகைகள் போக ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Jio Unlimited 5G Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, ஜியோ 5ஜி சர்வீஸ் ஏரியாக்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.299 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 299 Postpaid Plan Details): இந்த திட்டத்தில் ஃபேமிலி சிம் கனெக்சன் சலுகை கொடுக்கப்படாது. மற்றபடி அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள், நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும். அதேபோல 30 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.

இந்த டேட்டாவுக்கு பின் பயன்படுத்தும் ஒவ்வொரு ஜிபிக்கும் ரூ 10 வசூலிக்கப்படும். இந்த திட்டத்துக்கும் ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல ஜியோடிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சலுகை கொடுக்கப்படுகிறது. ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ரூ 500 பட்ஜெட்டுக்கும் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வேண்டுமானால், இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன.

மேற்கூறிய சலுகைகளோடு உங்களுக்கு ஓடிடி சலுகையும் வேண்டுமானால், ரூ 699 விலையில் கிடைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டம் சரியான தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், ஃபேமிலி சிம் கனெக்சன் மட்டுமல்லாமல், முன்னணி ஓடிடி நிறுவனங்களில் சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முழு சலுகைகளை பார்ப்போம்.

ஜியோ ரூ 699 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 699 Postpaid Plan Details): இந்த திட்டத்தில் 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக ரூ 99 செலுத்தி ஃபேமிலி சிம் கார்டுகளை இணைத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக 3 சிம் கார்டுகளை இணைத்துக் கொள்ள முடியும்.

இந்த சலுகைகள் போக நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic) மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது. அதோடு ஜியோடிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஜியோ அன்லிமிடட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 399 Postpaid Plan Offer 30 Days Validity, 75 GB Data, Unlimited 5G, 3 Family SIM Connection
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X