Home
News

சும்மாவா அம்பானினா.. ரூ.399-க்கு முடிச்சாரு.. இனி பழசு மட்டுமில்ல.. புதுசா கோல்டு.. ப்ரீ-டிரையல்.. என்ன வருது?

ஒரேவொரு ஜியோ திட்டத்தில் ஒட்டுமொத்த சலுகைகளும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியான திட்டத்தை பற்றி இங்கே பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே, டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளின் பட்டையை கிளப்பி ப்ரீபெய்ட் கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ஜியோ ரூ.399 திட்டத்தில் இப்போது, டிஜிட்டல் கோல்டு, ஜியோஹோம் ப்ரீ-டிரையல், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஃபுட் டெலிவரி போன்ற சலுகைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ 9ஆவது ஆண்டுவிழா கொண்டாட்ட சலுகைகள் (Jio 9th Anniversary Celebration Offers) பல்வேறு ஜியோ திட்டங்களில் கிடைக்கின்றன. இதில் ஜியோ ரூ.399 திட்டம் தனி கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால், இந்த திட்டத்தில் ஏற்கனவே சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. முதலில் இந்த திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

சும்மாவா அம்பானினா.. ரூ.399-க்கு முடிச்சாரு.. இனி பழசு மட்டுமில்ல!

ஜியோ ரூ 399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.

இதுபோக 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, வேலிடிட்டி முழுவதும் டேட்டாவில் ஒரு குறையும் இருக்காது. அதேபோல டேட்டா வவுச்சர்களும் தேவைப்படாது. வாய்ஸ் கால்களும் அன்லிமிடெட் சலுகையாக கிடைக்கின்றன. எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு 100 வீதம் கிடைக்கிறது.

ஆகவே, ஜியோ கஸ்டமர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை போலவே 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை வருகிறது. இப்போது, ஆண்டுவிழா சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை பார்த்த சலுகைகள் போக ஓடிடி, டிஜிட்டல் கோல்டு, ஜியோஹோம், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஃபுட் டெலிவரி மட்டுமல்லாமல், ஆன்லைனில் மருந்துகளை வாங்கும்படியும் இதில் சலுகைகள் கிடைக்கின்றன. ஓடிடி சலுகைகளை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இதற்கு 3 மாதங்கள் சந்தா கிடைக்கும்.

ஆகவே, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்தால், தொடர்ந்து ஓடிடி சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடிக்கு அடுத்து 2 மாதங்களுக்கு இலவசமாக டிரையல் செய்யுமபடி ஜியோஹோம் (JioHome) சலுகை கிடைக்கிறது. இது புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

முக்கிய சலுகையைக ஜியோ கோல்டு (Jio Gold) சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance) ஆப் மூலமாக டிஜிட்டல் கோல்டு வாங்கினால், அவர்கள் வாங்கும் கோல்டில் இருந்து 2 சதவீத கோல்டு கூடுதலாக கொடுக்கப்படும். இதற்கு ஜியோ கஸ்டமர்கள் 91-8010000524 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும்.

மேலும், ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலம் ஆர்டப் செய்தால், ரூ.399 சலுகை கிடைக்கும். அதேபோல அஜியோ தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.200 சலுகை கிடைக்கிறது. 3 மாதங்களுக்கு சொமோட்டோ கோல்டு மற்றும் 1 மாதத்துக்கான ஜியோசாவன் சலுகை கிடைக்கிறது. ஈஸ்மைட்ரிப் ஆப் மூலம் உள்நாட்டு விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் புக்கிங்கிலும் சலுகை கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 399 Plan With Voice Calls 70GB Data 28 Days Validity Jio 9th Anniversary Celebration Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X