அதான் அம்பானி.. விடக்கூடாத 2 ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 5ஜி டேட்டா.. ரூ.399-க்கு ஆரம்பம்.. வாய்ஸ் கால்ஸ்!
ஓடிடி, கேமிங் பிரியர்களுக்கு அதிகப்படியான டேட்டாவை கொடுக்கும் திட்டம் ரூ.500 பட்ஜெட்டுக்குள் வேண்டுமானால், ஜியோவில் (Jio) அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plans) இருக்கின்றன. இவற்றில் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், 2.5 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டாவை தினசரிக்கு கொடுத்து கஸ்டமர்களை ஜியோ தட்டித்தூக்கி இருக்கிறது. இதுபோக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகைகளை கொடுக்கிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ ரூ 399 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 399 Prepaid Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு அடுத்து அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த 2.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது.

ஓடிடி மற்றும் ஆன்லைன் கேமிங் பிரியர்களுக்கு தினசரிக்கு துளியும் குறையில்லாத டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. ஜியோ 5ஜி சேவைகள் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கிறது. அப்படி இல்லையென்றாலும், தினசரி டேட்டாவே 2 ஜிபிக்கும் மேல் கிடைப்பதால், 5ஜி இல்லாத நேரத்தில் இந்த டேட்டாவை பக்காவாக பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வருவதால், 70 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளே பட்டையை கிளப்புகின்றன. ஆனால், இந்த திட்டத்தில் டேட்டா போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Call) சலுகைகளையும் ஜியோ கஸ்டமர்களால் பெற முடிகிறது.
100 எஸ்எம்எஸ்களை தினசரி லிமிட்டில் அனுப்பி கொள்ளலாம். ஜியோவுக்கு மட்டும் கிடைக்கும், ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப்களின் சலுகையும் இதில் கிடைக்கிறது. தினசரி டேட்டா 2 ஜிபிக்கு மேல் வேண்டுமானால், இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
இதற்கு மேல் டேட்டா சலுகை வேண்டுமானால், தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டமும் ரூ.500 விலைக்குள் கிடைப்பதால், ஓடிடி மற்றும் ஆன்லைன் கேமிங் பிரியர்களின் பட்ஜெட்டில் குறையில்லாத டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடிகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகள் இதோ.
ஜியோ ரூ 449 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 449 Prepaid Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மட்டுமல்லாமல், தினசரிக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. சொல்லப்போனால், 3 ஜிபி டேட்டா சலுகைகளை தினசரிக்கு கஸ்டமர்களுக்கு போதுமானதாக இருக்கும், ஆனால், இதில் 5ஜியும் இருக்கிறது.
ஆகவே, டேட்டாவில் இந்த திட்டம் அடித்து கொள்ள முடியாதபடி இருக்கிறது. இந்த ஜியோ திட்டத்துக்கும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, இந்த நாட்களில் 84 ஜிபி டேட்டாவை (5ஜி டேட்டா இல்லாமல்) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தின் மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தில் கொடுக்கப்பட்டதை போலவே இருக்கின்றன.
டேட்டாவை போலவே அன்லிமிடெட் சலுகையில், லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் பயன்படுத்த கிடைக்கிறது. மேலும், தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சலுகைகளையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டங்களே டேட்டாவுக்கு துளியும் குறையில்லாத அனுபவத்தை கொடுக்கின்றன.


Click it and Unblock the Notifications








