அம்பானிக்கு லிமிட் இல்ல.. முதல் 30 நாட்கள் ப்ரீ.. ரூ.399 முதல் மூன்றே திட்டங்கள்.. வீட்டிற்கு சிம் பார்சல்!
அம்பானி கொடுக்கும் ஆஃபருக்கு லிமிட்டே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு ஜியோவின் (Jio) 3 திட்டங்களுக்கு முதல் 30 நாட்களுக்கு இலவச சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இப்படி ரூ.399 முதல் ரூ.699 வரையில் கம்மியான பட்ஜெட்டில் திட்டங்கள் இருக்கின்றன. இதுகுறித்த விவரம் இதோ.
இந்த சலுகைகள் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால், கஸ்டமர்களை கவரும் விதமாக யாரும் கொடுக்க முடியாத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. வீட்டிற்கே சிம் கார்டு பார்சல், ஒரே ரீசார்ஜில் ஃபேமிலி சிம் கார்டு கனெக்சன், அதோடு வாய்ஸ், டேட்டா சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. முதலில் இந்த திட்டங்களை பார்ப்போம்.

ஜியோ ரூ 399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 75 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Voice Calls) செய்து கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) சலுகை கிடைக்கிறது.
இதுபோக ஆட்-ஆன் சிம் (add-on SIM) கனெக்சன் வழங்கப்படுகிறது. ஆகவே, 3 சிம் கார்டுகளை கனெக்ட் செய்து கொள்ளலாம். இந்த சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு ஒவ்வொரு சிம் கார்டுக்கும் 5 ஜிபி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. முதல் 30 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம்.
ஜியோ ரூ 599 திட்ட விவரங்கள் (Jio Rs 599 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஆட்-ஆன் சிம் கனெக்சன் சலுகை கிடையாது. இருப்பினும், முதல் 30 நாட்களுக்கு இலவசமாக சலுகைகளை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகை கொடுக்கப்படுகிறது.

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை கொடுக்கிறது. ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றின் சலுகை பெறலாம். இதுபோக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகையும் கிடைக்கிறது.
ஜியோ ரூ 699 திட்ட விவரங்கள் (Jio Rs 699 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஆட்-ஆன் சிம் கனெக்சன் சலுகை மட்டுமல்லாமல், ஓடிடி சந்தாவும் கிடைக்கிறது. ஆகவே, பிரைமரி சிம் கார்டுக்கு 100 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
இதுபோக நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic), அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளங்களின் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 5 சிம் கார்டுகளை கனெக்ட் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு சிம் கார்டுக்கும் 5 ஜிபி டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
மேற்கண்ட திட்டங்களின் 30 நாட்கள் ப்ரீ சலுகை முடிந்த பிறகு, மீண்டும் சலுகைகளை பெற்றால், அந்த திட்டத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு கூடுதலாக கனெக்ட் செய்யும் சிம் கார்டுகளுக்கு தலா ரூ.99 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டங்களை பெற ஜியோ.காம் தளத்தை அனுகலாம்.
இந்த வெப்சைட்டில் இடம்பெற்றிருக்கும் போஸ்ட் பெய்ட் திட்டங்கள் பக்கத்துக்கு சென்று, உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து, கெட் நவ் (Get Now) டேப்பை கிளிக் செய்தால், உங்களது விவரங்கள் கேட்கப்படும். அதை கொடுத்துவிட்டால், சிம் கார்டு உங்களது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் சேவைகளை பெறலாம்.


Click it and Unblock the Notifications








