இதுதான் ப்ரோ சீப்பு.. இனி 2.5ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 28 நாட்களுக்கு கம்மி விலையில் 2.5ஜிபி திட்டம்!
ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வேண்டுமானால், அவர்களுக்கு மலிவு விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஓடிடி சந்தாவும் கிடைக்கிறது. வழக்கமான வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா முதல் ஜியோவில் திட்டங்கள் கிடைக்கின்றன. 1 ஜிபி டேட்டா திட்டங்கள் இப்போது நீக்கப்பட்டுவிட்டன. ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 2 ஜிபி டேட்டா, 2.5 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா திட்டங்கள் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இதில் 2.5 ஜிபி டேட்டா திட்டங்களானது ரூ.399 முதல் தொடங்குகின்றன.

சொல்லப்போனால், தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டா வேண்டுமானால், இதைவிட மலிவான விலைக்கு திட்டங்கள் கிடைக்காது. இதற்கு மேல் விலை கொண்ட திட்டங்களே கிடைக்கின்றன. ஆகவே, இதை மலிவு விலை 2.5 ஜிபி டேட்டா திட்டமாக கணக்கில் எடுத்து கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): இந்த 2.5 ஜிபி டேட்டா திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 70 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 70 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும். ஆனால், இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வருகிறது.
ஆகவே, 28 நாட்கள் முழுவதும் 4ஜி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 4ஜி வேகத்தில் கிடைக்கும் 2.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் வழக்கம்போலவே கிடைக்கின்றன.
அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Voice Calls), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இதுவரை பார்த்த சலுகைகள் போக கூடுதலாக ஓடிடி சந்தா மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் சலுகை கொடுக்கப்படுகிறது. இது ஜியோ அன்லிமிடெட் ஆஃபரில் (Jio Unlimited Offers) வருகிறது.
ஆகவே, இது ஒன் டைம் ஆஃபராக (One Time Offer) மட்டுமே கிடைக்கும். இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கிறது. ஆனால், திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருந்தாலும், இந்த ஓடிடி சந்தாவுக்கு மட்டும் 90 நாட்கள் வரையில் சலுகை கிடைக்கும். இதனால். 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்யுங்கள்.
இல்லையென்றால், ஓடிடி சந்தாவை தொடர்ந்து பெற முடியாது. இந்த அன்லிமிடெட் ஆஃபரில் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் இருக்கிறது. இதில் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதை ஜியோ கிளவுட் ஆப் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். அதேபோல ரீசார்ஜ் செய்யப்பட்ட ஜியோ நம்பருக்கு மட்டுமே கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications








