முடியலடா சாமி.. அம்பானி படுற பாடு.. ரூ.399-க்கு இறங்கியாச்சு.. இதைவிடவா கம்மியா வேணும்.. BSNL-க்கு Jio போட்டி!
இந்தியாவின் முக்கால்வாசி டெலிகாம் கஸ்டமர்களை கட்டிக் காப்பாத்தி வந்த ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமே கொஞ்ச நாளாக படாதபாடுபட்டு வருகிறது என்பதே உண்மை. வழக்கமாக ஏற்றிய ரீசார்ஜ் கட்டணத்துக்கு இந்த முறை கஸ்டமர்கள் கொடுக்கும் ரியாக்சன் வேறு மாதிரி இருக்கிறது. இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துடன் ஜியோவை ஒப்பிட கஸ்டமர்கள் தொடங்கிவிட்டனர். இதனால் ஜியோ நிறுவனம் சத்தமே இல்லாமல், புதுப்புது திட்டங்களை மலிவாக கொடுக்க திட்டமிட்டருப்பதாக தெரிகிறது. இப்போது. ரூ 399 பட்ஜெட்டில் சம்பவம் நடந்துள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ரீசார்ஜ் விலையேற்றத்துக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்கள் எண்ணிக்கை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. மிகவும் மலிவான விலையில் திட்டங்கள் இருப்பதால், கண்ணை மூடிக்கொண்டு பிஎஸ்என்எல் சேவைக்கு மாறுவதை பார்க்க முடிகிறது. இது நாளடைவில் ஜியோ Vs பிஎஸ்என்எல் போட்டியாக மாறிவிடும் போலிருக்கிறது.

இப்போது நடக்கும் சம்பவங்களை பார்த்தால், ஜியோவுக்கும் பிஎஸ்என்எல்லுக்கும் போட்டி நடப்பதாகவே தெரிகிறது. இதேபோல ரூ 399 ஆரம்ப விலையில் கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டத்தில் யார் பெஸ்ட் என்ற விவாதம் கஸ்டமர்களிடையே தோன்றி இருக்கிறது. ஏனென்றால், பெரும்பாலான கஸ்டமர்கள் இந்த திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் கிடைக்கும் டேட்டா சலுகைகள் நம்ப முடியாதபடி இருக்கிறது.
ஜியோ ரூ 399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் (Broadband Plan) 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதிகபட்சமாக 3.3 டிபி டேட்டாவை பெற்று கொள்ள முடியும். இதுபோக லேண்ட்லைன் கனெக்சன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை பெறலாம். இந்த பிராட்பேண்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இதை தவிர வேறு சலுகைகள் கிடையாது. ஆனால், பிஎஸ்என்எல்லில் கூடுதலாக சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், மொத்த டேட்டாவை பார்க்கையில் சற்று குறைவாக இருக்கிறது. இருப்பினும், ஜியோ சேவை கிடைக்காத மலை கிராமங்கள் மற்றும் தொலைதூரப்பகுதிகளிலும் இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்கும். அதே நேரத்தில் வணிக ரீதியாக கிடைப்பது இல்லை. இந்த திட்ட சலுகைகளை பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ 399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): இந்த திட்டத்திலும் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இது ஜியோவை விட குறைவுதான். அதேபோல லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் சலுகையை இந்த பிஎஸ்என்எல் திட்டம் கொடுக்காது. அதே நேரத்தில் ஒரே வேகத்தில் கிடைக்கக்கூடியது.
இப்போகு, 2 திட்டங்களில் எது பெஸ்ட் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். இருப்பினும், ஜியோ சற்று கூடுதல் டேட்டா சலுகைகளை கொண்டிருந்தாலும், போஸ்ட் டேட்டா சலுகைக்கு பதிலாகவே அந்த கூடுதல் டேட்டா சலுகையை கொடுக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட 2 திட்டங்களும் ஒன்று போலத்தான் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் ஜியோவின் சேவைகள் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் அப்படி இல்லை என்பதை மறுக்க முடியாது.
ஜியோ விலை ஏற்றத்துக்கு பிறகு, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ 155 திட்டம் ரூ 189ஆகவும், ரூ 209 திட்டத்தின் விலை ரூ 249ஆகவும், ரூ 239 திட்டத்தின் விலை ரூ 299ஆகவும் மாற்றப்பட்டது. அதேபோல ரூ 349 திட்டத்தின் விலை ரூ 299ஆகவும், ரூ 299 திட்டத்தின் விலை ரூ 349ஆகவும் அதிகரிக்கப்பட்டது. ரூ 999 திட்டத்தின் விலை ரூ 1199ஆகவும், ரூ 1559 திட்டத்தின் விலை ரூ 1899ஆகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








