Home
News

Jio சிம் இருந்தா உடனே இதை பண்ணுங்க.. செலவு ரூ.399 தான்.. ஆனால், வர்றது ரூ.35,100.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா!

ஜியோ (Jio) சிம் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ரூ.399 செலவில் 18 மாதங்களுக்கான சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ், 90 நாட்களுக்கு ஓடிடி சந்தா கிடைக்கிறது. மேலும், ஜியோ கோல்டு சலுகை முதல் ஜியோ ஹோம் சலுகை வரையில் கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்படியென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை மூன்றாக பிரித்து கொள்ளலாம். முதலில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. அடுத்தது ஜியோ கோல்டு (Jio Gold), ஜியோ ஹோம் (Jio Home), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (JioAI Cloud) ஆகிய சலுகைகள் இருக்கின்றன.

Jio சிம் இருந்தா உடனே இதை பண்ணுங்க.. செலவு ரூ.399 தான்.. ஆனா, வர்றது?

மூன்றாவதாக கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, மொத்தமாக 70 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும், 2.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையையும் பெற்று கொள்ளலாம். இப்போது, 2ஆவது சலுகைகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகளாக ஜியோ கோல்டு சலுகை கிடைக்கும். ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக டிஜிட்டல் கோல்டு வாங்கும்போது, அதில் கூடுதலாக 2 சதவீதம் கொடுக்கப்படும். அடுத்து ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் சலுகைகளை கொடுக்கும் ஜியோஹோம் சலுகை கிடைக்கிறது. இதை 2 மாதங்களுக்கு பெற்று கொள்ளலாம்.

இது ப்ரீ-டிரையல் போல கொடுக்கப்படுகிறது. ஆகவே, 2 மாதங்களுக்கு இலவசமாக வை-பை டேட்டா, ஓடிடி சந்தா மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படும். இந்த சலுகைகளை டிவிகளில் பயன்படுத்தலாம். மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar: Mobile Subscription) கிடைக்கிறது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.

ஆகவே, திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், ஓடிடி சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கும். இதனால், 28 நாட்களுக்கு பிறகு அடுத்த ரீசார்ஜை உடனடியாக செய்து கொள்ள வேண்டும். மேலும், 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். இதை ஜியோ ஏஐ கிளவுட் மூலம் பயன்படுத்தலாம். இதற்கான ஆப் கிடைக்கிறது.

இப்போது, மூன்றாவது சலுகைகளுக்கு வருவோம். இந்த சலுகை லேட்டஸ்ட்டாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஜியோவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், இந்த சலுகை கிடைக்கிறது. அதாவது, கூகுள் நிறுவனத்தில் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கிறது.

அதிலும் 18 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரையில் இருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த சந்தா கொடுக்கப்படுகிறது. 18 மாதங்கள் சந்தா வருவதால், அந்த நாட்கள் வரையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இந்த சந்தாவின் விலை ரூ.35,100ஆக இருக்கிறது. ஆனால், இதில் இலவசமாக கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 399 Plan With 28 Days Validity Unlimited Voice Calls 70GB Data Free Gemini Pro 18 Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X