Jio ஒரே போடு.. ரூ.399-க்கு முடிச்ச அம்பானி.. 2.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஓடிடி சந்தா!
ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், கேமிங் சந்தா, ஓடிடி சந்தா மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சலுகைகளும் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) பக்கா தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
ஜியோ கேம்ஸ் சலுகைகளுடன் சில ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் டேட்டா சலுகைகள் அதிகமாக இருக்கும் திட்டமாக ஜியோ ரூ.399 திட்டம் இருக்கிறது. ஏனென்றால், இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், தினசரிக்கு கிடைக்கும் டேட்டாவும் அதிகமாக இருக்கும். அதேபோல கேமிங் சலுகைகளும் கிடைக்கும்.

ஜியோ ரூ.399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) பயன்படுத்தி கொள்ளலாம்.
4ஜி கஸ்டமர்களாக இருந்தால், 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimted Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி (JioTV) சந்தாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கும்.
இப்போது, கூடுதல் சலுகைகளுக்கு வரலாம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) கொடுக்கப்படும். ஆகவே, இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்தால் போதும், ஓடிடி சந்தாவை தொடர்ந்து பெற்று கொள்ளலாம்.
இந்த ஓடிடி சந்தா போக கிரிக்கெட் பிரியர்கள் விரும்படியான ஃபேன்கோட் (Fancode) சந்தா கொடுக்கப்படும். இந்த சந்தாவை ஜியோ டிவி ஆப் வழியாக மட்டுமே கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த ஓடிடி ஆப்களின் சந்தா போக ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile) சந்தாவை இந்த ஜியோ ரூ.399 திட்டம் கொடுத்து இருக்கிறது.
ஆகவே, ஸ்மார்ட்போனில் மட்டுமே இந்த கேம்களை அணுக முடியும். மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாவையும் இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இதில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இதுபோக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவையும் இந்த ஜியோ ரூ.399 திட்டம் கொடுத்து உள்ளது.
இதில் 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோர்ஜ் கிடைக்கும். நானோ பனானா (Nano Banana) அணுகல் கொடுக்கப்படும். இப்படி ஒரே திட்டத்தில் தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பிரீமியம் ஓடிடி சந்தா, கேமிங் சந்தா போன்ற சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதனாலேயே கஸ்டமர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜியோகேம்ஸ் (JioGames), ஜியோஏஐகிளவுட் ஆப் (JioAIcloud App) உள்ளிட்ட ஆப்களை அணுக வேண்டுமானால், ரீசார்ஜ் செய்யப்பட்ட அதே மொபைல் நம்பரை வைத்து மட்டுமே லாகின் செய்ய வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே சலுகைகளை பயன்படுத்தி கொள்ள முடியும். வேறு மொபைல் நம்பரில் பயன்படுத்த முடியாது.


Click it and Unblock the Notifications