Home
News

Jio SIM இருக்கா.. அடுத்த 28 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. கேமிங், ஓடிடி பிரியர்கள் இதை பண்ணுங்க!

ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களில் கேமிங் மற்றும் ஓடிடி சந்தாவை விரும்பும் பிரியர்களுக்கு பக்காவான திட்டம் ஒன்று இருக்கிறது. ஏனென்றால், இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த கேமிங் + ஓடிடி திட்டத்தை பார்க்கலாம்.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மொத்தமாக 3 சலுகைகள் கொடுக்கப்படும். அதாவது, வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கேமிங் மற்றும் ஓடிடி சந்தா கிடைக்கும். மேலும், ஜியோ ஸ்பெஷல் ஆஃபரின் கீழ் கிளவுட் டேட்டா, ஜெமினி சாட்பாட் சந்தா கிடைக்கும்.

Jio SIM இருக்கா.. அடுத்த 28 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. கேமிங்!

ஜியோ ரூ.399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): இந்த திட்டத்தில் ஏகப்பட்ட சலுகைகள் கிடைப்பதால், 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile) சந்தா கொடுக்கப்படும். கிளவுட் கேம்களை நேரடியாக விளையாடி கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கும்.

மேலும், ஃபேன்கோட் (Fancode) சந்தா கிடைக்கும். இந்த சந்தாவை ஜியோ டிவி (Jio TV) ஆப் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது, வழக்கமாக கிடைக்கும் சலுகைகளுக்கு வரலாம். இதில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது.

4ஜி டேட்டாவில் மொத்தமாக 70 ஜிபி கிடைக்கும். ஆகவே, கேமிங் மற்றும் ஓடிடிகளுக்கு ஏற்ப டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். 28 நாட்களில் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம்.

இந்த சலுகைகள் போக ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் கிடைக்கிறது. இதில் கிளவுட் ஸ்டோரேஜ் வாரி வழங்கப்பட்டு உள்ளது. ஆகவே, 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜை ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ மொபைல் நம்பரை வைத்து மட்டுமே இதை பயன்படுத்த முடியும். ஜியோ கிளவுட் ஆப்பை டவுன்லோட் செய்து இதை பயன்படுத்தலாம்.

மேலும், 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதை ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், இந்த ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதலாக நானோ பனானா, வியோ வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட அணுகல்கள் கிடைக்கிறது.

28 நாட்களுக்கு வெறும் கேமிங் திட்டம் மட்டுமே வேண்டுமானால், ரூ.298 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதுவொரு ஆட்-ஆன் திட்டமாக இருக்கிறது. ஆகவே, ஏற்கனவே ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். இது லம்ப்-சம் டேட்டா மற்றும் கேமிங் சந்தாவை மட்டுமே கொடுக்கும். இந்த கேமிங் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.298 திட்ட விவரங்கள் (Jio Rs 298 Plan Details): இந்த கேமிங் திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் மொத்தமாகவே 3 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். மேலும், ஜியோகேம்ஸ் கிளவுட் சந்தா கிடைக்கும். இதில் 500+ பிரீமியம் கேம்கள் கிடைக்கும். மொபைல் மட்டுமல்லாமல், பிசி, டிவி, லேப்டாப்களிலும் கேம்களை விளையாடலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 399 Plan 2.5 GB Data Unlimited Voice Calls 28 Days Validity Check Jio Gaming Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X