Home
News

அம்பானி நெத்தி அடி.. வெறும் ரூ.398 போதும்.. ப்ரீ டேட்டா.. வாய்ஸ் கால்.. அன்லிமிடெட் 5ஜி சலுகை.. ஓடிடி சந்தா!

டெலிகாம் மார்கெட்டில் யாரும் கொடுக்க முடியாதபடி ரூ.398 பட்ஜெட்டில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், 2ஜிபி தினசரி டேட்டா போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், 12 ஓடிடி சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 6ஜிபி கூடுதல் டேட்டா சலுகையை ஜியோ வழங்குகிறது.

ஜியோ ரூ 398 திட்ட விவரங்கள் (Jio Rs 398 Plan Details): இந்த திட்டத்தில் கிடைக்காத சலுகைகளே இல்லையென்றே சொல்ல வேண்டும். வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS), டேட்டா (Data), ப்ரீ டேட்டா (Free Data), 5ஜி டேட்டா (5G Data), ஜியோ ஆப்கள் (Jio Apps) மற்றும் ஓடிடி சந்தா (OTT Subscription) என்று மொத்த சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.

ரூ.398 போதும்.. ப்ரீ டேட்டா.. வாய்ஸ் கால்.. அன்லிமிடெட் 5ஜி சலுகை!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 56 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் ஜியோ வெல்கம் ஆஃபர் (Jio Welcome Offer) பெறும் கஸ்டமர்களுக்கு இந்த 5ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வளவு டேட்டா சலுகைகள் போதாதென்று, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போதே 6 ஜிபி கூடுதல் டேட்டா (6GB Extra Data) இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. இவ்வளவு சலுகைகளும் போக 12 ஓடிடி தளங்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

ரூ.398 போதும்.. ப்ரீ டேட்டா.. வாய்ஸ் கால்.. அன்லிமிடெட் 5ஜி சலுகை!

ஆகவே, சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்ச்சோய் (Hoichoi) ஆகிய ஆப்களின் சந்தா கிடைக்கிறது.

அதோடு ஜியோடிவி (JioTV), சௌபால் (Chaupal), டாக்குபே (DocuBay), எபிக் ஆன் (EPIC ON) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஜியோகிளவுட் (JioCloud) சலுகையும் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதே சலுகைகளுடன் கூடுதல் வேலிடிட்டி மற்றும் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ போன்ற ஆப்களின் சந்தா வேண்டுமானால், ரூ 1198 திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ 1198 திட்ட விவரங்கள் (Jio Rs 1198 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் டேட்டா, ஓடிடி, ப்ரீ டேட்டா, 5ஜி டேட்டா போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் 168 ஜிபி டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். அதோடு 18 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது.

இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile) சந்தா கிடைக்கிறது.

அதேபோல 84 நாட்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) சந்தா கிடைக்கிறது. இதுபோக முந்தைய திட்டத்தில் கிடைத்த 12 ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இதில் ஜியோசினிமா பிரீமியம் சந்தாவுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 398 Plan With Voice Calls, 2GB Data, 12 OTT Subscription, Unlimited 5G, 28 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X