யாரு சாமி நீ.. 12 OTT தளங்கள்.. தினமும் 2GB டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. மாஸ் காட்டிய Jio.. எந்த திட்டம்?
ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம்.
அதன்படி 12ஜி ஓடிடி தளங்கள் மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்கும் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் தான் இந்த அன்லிடெட் சலுகைகளை வழங்குகின்றன. இப்போது ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (Jio RS 398 Plan) ஆனது 12 ஒடிடி சேவைகளுக்கான சந்தாவை வழங்குகிறது. அதன்படி சோனி லிவ், ZEE5, லியாங்கேட் ப்ளே, டிஸ்கவரி+, சன் என்எக்ஸ்டி, Kanchha Lannka, பிளானட் மராத்தி, சௌபால், Hoichoi, டாக்குபே, எபிக் ஆன், ஜியோடிவி ஆப் உள்ளிட்ட ஆப்ஸ்களுக்கான சந்தா வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்ட கிடைக்கிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகல் வழங்குகிறது ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக ஜியோவின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் அனைத்து சலுகைகளையும் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் இந்நிறுவனம் ரூ.148 ரீபெய்ட்ட திட்டமும் வைத்துள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அதிக ஓடிடி தளங்களின் சந்தா கிடைக்கும்.
அதாவது ஜியோ ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது சோனி லிவ், ஜீ ஃபைவ், சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட 12 ஓடிடி சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 10ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் வழங்கப்படவில்லை. மேலும் ஜியோ நிறுவனம் வைத்துள்ள சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம் Sony Liv மற்றும் Zee5 ஆகிய ஓடிடி தளத்தின் இலவச சந்தா வழங்குகிறது. அதேபோல் ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக ரூ.1099 திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி 100எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது.
ஜியோ ரூ.758 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் ஜியோ ரூ.758 கிடைக்கிறது. 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.


Click it and Unblock the Notifications








