Home
News

மொத்தமா முடிச்ச அம்பானி.. வெறும் ரூ.398 கதை க்ளோஸ்.. 12 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!

ஒட்டுமொத்த ஓடிடி பிரியர்களும் அறக்க பறக்கும் விதமாக வெறும் ரூ 398 மதிப்பிலான திட்டத்தில் 12 ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை ஜியோ (Jio) நிறுவனம் வழங்குகிறது.

இப்போது, வெறும் ரூ 500 பட்ஜெட்டுக்குள் 4 ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ நிறுவனம் வைத்திருக்கிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் 2 ஜிபி டேட்டாவை நாள்தோறும் கொடுக்கின்றன. ஆகவே, இந்த நான்கு திட்டங்களின் விலை மற்றும் சலுகைகளின் மொத்த விவரங்களை இப்போது பார்ப்போம்.

மொத்தமா முடிச்ச அம்பானி.. வெறும் ரூ.398 கதை க்ளோஸ்.. 12 ஓடிடி சந்தா!

ஜியோ ரூ 249 திட்ட விவரங்கள் (Jio Rs 249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மொத்தமாக 46 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆப்களின் சந்தா மற்றும் 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ 299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆனால், இதில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.

ஆகவே, 56 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை இந்த திட்டத்திலும் பயன்படுத்தலாம். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஜியோ ரூ 388 திட்ட விவரங்கள் (Jio Rs 388 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ், 5ஜி மட்டுமல்லாமல், கூடுதலாக ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டாவை சலுகை வருகிறது.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால், இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கிறது. அதேபோல ஜியோ ஆப்கள் கிடைக்கின்றன.

ஜியோ ரூ 398 திட்ட விவரங்கள் (Jio Rs 398 Plan Details): இந்த திட்டத்தில் அதிகப்படியான ஓடிடி சலுகைகள் மற்றும் டேட்டா சலுகைகள் வருகின்றன. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 6 ஜிபிக்கான டேட்டா வவுச்சர் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டிக்கு 56 ஜிபி டேட்டா மற்றும் 6 ஜிபி டேட்டா என்று மொத்தமாக 62 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் ஜியோ ஆப்களை பயன்படுத்தலாம்.

இதுபோக 12 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. சோனி லிவ், ஜீ5, ஜியோசினிமா ப்ரீமியம், லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி, ஹோய்ச்சோய் மற்றும் எபிக்ஆன் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தலாம். ஜியோசினிமா பிரீமியம் 28 நாட்களுக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 398 Plan Offers 2GB Data, Unlimited Voice Calls, 12 OTT Subscription Here Under Rs 500 Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X