Home
News

இறங்கி அடித்த ஜியோ.. மாதம் ரூ.131 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 5ஜி டேட்டா!

ஜியோ (Jio) கஸ்டமர்கள் மிகவும் மலிவான விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அதிக நாட்களுக்கு பயன்படுத்த வேண்டுமானால், இந்த வேல்யூ ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு திட்டம் மாதம் ரூ.131 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டியும், மற்றொரு திட்டம் மாதம் ரூ.141 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டியும் கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plan) டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோசினிமா சந்தா கொடுக்கப்படுகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

ஜியோ ரூ 395 திட்ட விவரங்கள் (Jio Rs 395 Plan Details): இந்த வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்தில் (Value Prepaid Plan) டேட்டா, எஸ்எம்எஸ், வாய்ஸ் கால் சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் கூடுதல் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இறங்கி அடித்த ஜியோ.. மாதம் ரூ.131 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி!

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினசரி டேட்டா வழங்கப்படவில்லை. ஆனால், 6 ஜிபி லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக 6 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவையை பெற்று கொள்ளலாம்.

டேட்டாவை போலவே 1000 எஸ்எம்எஸ் சலுகை மொத்தமாக கிடைக்கிறது. இருப்பினும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை வருகிறது. இதுபோக ஜியோ நிறுவனத்தின் ஆப்களின் சலுகைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இந்த பிரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் ஜியோசினிமா சந்தாவானது, பிரீமியம் சலுகைகளை கொடுக்காது. இதற்கான மாதாந்திர செலவு ரூ.131 மட்டுமே.

ஆகவே, மிகவும் மலிவான விலையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை 84 நாட்களுக்கு பயன்படுத்த விரும்பும் இந்த திட்டத்தை ஜியோ கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்கலாம். இதே சலுகைகள் ஆண்டு முழுவதும் வேண்டுமானால், ரூ.1559 விலையில் கிடைக்கும் மற்றொரு வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 1559 திட்ட விவரங்கள் (Jio Rs 1559 Plan Details): ஜியோவில் கிடைக்கும் மலிமான வருடாந்திர திட்டம் இதுவாகும். முந்தைய திட்டத்தை போலவே லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் வழக்கமான ஜியோ ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்தில் 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. ஆகவே, 24 ஜிபிக்கு பிறகும் டேட்டா சேவை கிடைக்கும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வருகிறது. வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு இது பொருந்தும்.

முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தை போலவே மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வேல்யூ திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஆகவே, மாதாந்திரம் ரூ.141 செலவில் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் குறைவான டேட்டா சலுகை வேண்டுமானால், இந்த ஜியோ வேல்யூ ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், மலிவான விலையில் ஹை-ஸ்பீடு டேட்டாவை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 395 Plan Offers 84 Days Validity, Unlimited Voice Calls And 5G Data, JioCinema Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X