Home
News

இறங்கி அடிச்ச அம்பானி.. மாதம் ரூ.305 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்.. 2.5ஜிபி டேட்டா.. 2 ஓடிடி!

மாதாந்திரம் வெறும் ரூ.305 செலவில் வருடம் முழுவதும் அதிகப்படியான டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், சோனிலிவ், ஜீ5 ஓடிடி ஆப்களின் சந்தா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இந்த ஓடிடிகளுடன் 2 திட்டங்கள் இருக்கின்றன. விவரம் இதோ.

ஜியோ ரூ 909 திட்ட விவரங்கள் (Jio Rs 909 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிலிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு வருகிறது.

இறங்கி அடிச்ச அம்பானி.. மாதம் ரூ.305 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வருவதால், 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கிடைப்பதால், 2 ஜிபிக்கு பிறகும் டேட்டா சேவையை பெறலாம். அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) டேட்டா சலுகை கிடைக்கிறது.

இந்த மூன்று மாத திட்டத்தில் சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோசினிமா (JioCinema) ஆகிய ஓடிடி ஆப்களின் (OTT Apps) சந்தா மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) சலுகை கிடைக்கிறது. இதில் ஜியோ டிவிக்கு மொபைல் சந்தா (Mobile Subscription) கிடைக்கிறது.

மூன்று மாதங்களுக்கு 2 ஓடிடி ஆப்களின் சந்தா, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா போன்ற அதிகப்படியான சலுகைகள் கம்மி பட்ஜெட்டில் வேண்டுமானால், இந்த ஜியோ ரூ 909 திட்டத்தை வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், இதற்கான மாதாந்திர செலவு ரூ.303ஆக இருக்கிறது. இதே ஓடிடிகளுடன் வருடாந்திர சலுகையுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ 3662 திட்ட விவரங்கள் (Jio Rs 3662 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகப்படியான தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் 2 ஓடிடி ஆப்களில் சந்தா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் தினசரி 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஆகவே, மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

ஆகவே, 2.5 ஜிபிக்கு பிறகும் டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. எந்தவொரு டேட்டா வவுச்சர்களும் தேவைப்படாமல், இந்த திட்டத்தை மட்டுமே பயன்படுத்தலாம். இதுபோக தினமும் 100 எஸ்எம்எஸ்களை ஜியோ வாடிக்கையாளர்கள் அனுப்பி கொள்ளலாம்.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகையும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் சோனிலிவ் , ஜீ5, ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா ஆகிய ஓடிடி ஆப்களில் சந்தா கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே ஜியோகிளவுட் ஆப்பையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதில் ஜியோ டிவிக்கு மொபைல் சந்தா கிடைக்கிறது. ஆனால், ஜியோசினிமாவுக்கு பிரீமியம் சந்தா கொடுக்கப்படவில்லை. இந்த ஓடிடிகளை வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மாதம் ரூ.305 மட்டுமே செலவாகிறது. இந்த பட்ஜெட்டில் 2.6 ஜிபி டேட்டா, 2 ஓடிடி சந்தா கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3662 Plan Offers 365 Days Validity, Unlimited Voice Calls, SonyLIV and ZEE5 Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X