விட்ராதீங்க ப்ரோ.. ரூ.209 க்கு இறக்கிய அம்பானி.. வாய்ஸ் கால்கள்.. 1 ஜிபி டேட்டா.. 22 நாட்கள் வேலிடிட்டி!
ஜியோ (Jio) நிறுவனத்தின் 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் மலிவான விலைக்கு நல்ல சலுகைகள் கிடைக்கின்றன. டாக்டைம் வேல்யூ மற்றும் ஆரம்ப விலைக்கு தினசரி டேட்டா சலுகைகளை கொண்டுள்ளன வேல்யூ விருப்பத்தின் கீழ் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.365 திட்டம் (Jio Rs 365 Plan): அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் செய்து கொள்ளலாம். 30 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 25 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

அதாவது, தினசரி டேட்டாவுக்கு பதிலாக மொத்தமாக 25 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, வேலிடிட்டி முன்பாக இந்த டேட்டா முடிந்துவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும். மேலும், ரூ.7.47 டாக்டைம் வேல்யூ கிடைக்கிறது. சொல்லப்போனால், டாக்டைம் வேல்யூ கிடைக்கும் ஒரே திட்டமாகவும் இது இருக்கிறது.
இந்த சலுகைகளை வழக்கமாக கிடைக்கின்றன. இப்போது, கூடுதல் சலுகையாக ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் (Jio Special Offer) வழங்கப்பட்டு உள்ளது. இதில் 3 மாதங்களுக்கு பயன்படுத்தும்படி ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா (JioHotstar Mobile / TV Subscription) சந்தா கொடுக்கப்படுகிறது. 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கும்படி ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) வருகிறது.
இந்த சலுகைகள் போக புதியாக சேர்க்கப்பட்ட ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கிறது. 18 மாதங்களுக்கு கிடைக்கும் இந்த சந்தாவின் மதிப்பானது ரூ.35,100ஆக இருக்கிறது. ஆகவே, இந்த விலைக்கு கிடைக்கும் 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் முதல் நானோ பனானா (Nano Banana) இமேஜ் ஜெனரேஷன் வரையில் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய மைஜியோ ஆப் அல்லது ஜியோ போர்டலை அணுகலாம். ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கும் வேல்யூ விருப்பத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆனால், அடுத்து பார்க்க இருக்கும் திட்டத்தை மைஜியோ ஆப் வழியாக மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். ஜியோ போர்டல் வழியாக ரீசார்ஜ் செய்ய முடியாது.
ஜியோ ரூ.209 திட்டம் (Jio Rs 209 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமும் வேல்யூ விருப்பத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. 22 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா கிடைக்காது. நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கும். 22 நாட்களில் மொத்தமாக 22 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.
1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதிலும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆனால், முந்தைய திட்டத்தில் கிடைத்த ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் கிடைக்காது.
மலிவான விலைக்கு தினசரி டேட்டாவுடன் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டாக்டைம் வேல்யூ வேண்டுமானால், முதலில் பார்த்த திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த 2 திட்டங்களும் வேல்யூ விருப்பத்தின் கீழ் கிடைக்கிறது. ஆகவே, அதில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








