ஒரே Jio ரீசார்ஜ்.. முழுசா 365 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2.5 ஜிபி டேட்டா.. 100 எஸ்எம்எஸ்.. எந்த திட்டம்?
ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ஒரேவொரு ரீசார்ஜ் மூலம் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ், 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை கொடுக்கும் திட்டத்தை இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். சொல்லப்போனால், இந்த திட்டம் ஜியோ நிறுவனத்தில் ஆரம்ப விலைக்கு தொடங்கும் வருடாந்திர திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் முழு சலுகை விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது என்றால், மலிவான விலைக்கு கிடைக்கும் என்று எண்ண வேண்டாம். இந்த விலையில் இருந்து தொடங்குவதால், மலிவான விலை வருடாந்திர திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ 3,599ஆக இருக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு தினசரி டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் கிடையாது.

இதற்கு மேல் ரூ 3,999 விலைக்கு மட்டுமே தினசரி டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் இருக்கிறது. ஆகவே, ரூ.3,999 திட்டத்துடன் ஒப்பிடுகையில், ரூ.3,599 திட்டமானது மலிவாகவே கிடைக்கிறது. இந்த விலைக்கு கிடைப்பதால், சலுகைகளில் குறை சொல்லிவிட முடியாது. டேட்டா தொடங்கி, வாய்ஸ், எஸ்எம்எஸ், ஓடிடி என்று மொத்த சலுகைகளும் வருகிறது.
டேட்டாவை பார்க்கையில் 2ஆக பிரித்து கொள்ளலாம். அதாவது, 4ஜி வேகத்தில் (4G Speed) தினசரி டேட்டா (Daily Data) கிடைக்கும். அதே நேரத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கொடுக்கப்படும். இதுபோக டெலிகாம் கஸ்டமர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையும் கிடைக்கிறது.
ஜியோ ரூ 3599 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Prepaid Plan Details): இதுவொரு வருடாந்திர திட்டமாக இருப்பதால், 365 நாட்களுக்கு உங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, ஒரு வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா, அன்லிமிடெட் 5ஜி மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால், ஓடிடி சந்தா அப்படி கிடையாது.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு முதல் 90 நாட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். ஏனென்றால், இந்த ஓடிடி சந்தா மட்டும் ஜியோ அன்லிமிடெட் சலுகையின் (Jio Unlimited Offer) கீழ் கிடைக்கிறது. இது அண்மையில் கூடுதலாக சேர்க்கப்பட்ட சலுகையாகும். ஆகவே, இது வழக்கமான கிடைக்கும் திட்டத்துக்கு வழங்கப்படவில்லை.
இப்போதைக்கு கிடைப்பதால், உங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா 90 நாட்களுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. இதே ஜியோ அன்லிமிடெட் சலுகையின் கீழ் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கொடுக்கும்படி ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது முக்கிய சலுகைகளுக்கு வருவோம்.
இந்த ஜியோ ரூ 3,599 திட்டத்தில் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. 4ஜி டேட்டாவை பார்க்கையில், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.
முன்பே சொன்னதை போல இந்த 4ஜி டேட்டா போக ஜியோ 5ஜி சலுகையை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். 4ஜி டேட்டாவே உங்களுக்கு 912.5 ஜிபி கிடைக்கும்போது, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வந்தால், இதில் டேட்டாவுக்கு எந்த குறையும் இருக்காது என்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications








