Jio கொண்டுவந்த ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாள் வேலிடிட்டி?
ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களைக் கொண்டு வருகிறது ஜியோ (jio) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் சில திட்டங்களில் அதிக டேட்டாவுடன் ஓடிடி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் கிடைக்கிறது. எனவே தான் பலர் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேபோல் ஜியோ நிறுவனம் கொண்டுவந்த ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஓடிடி, கிளவுட் ஸ்டோரேஜ், பிரீமியம் ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. இப்போது இந்த ஜியோ ரூ.3599 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 50ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் பெறமுடியும். குறிப்பாக இதை பெறுவதற்கு உங்கள் ஜியோ நம்பர் உடன் இணைக்கப்பட்ட ஜிமெயில் ஐடி தேவைப்படும். மேலும் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தின் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஜியோ டிவி (Jio TV) ஆப் சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்தை விட கம்மி பட்ஜெட்டில் சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடும் பயனர்கள் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட்திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








