இனிமே கம்மி இதுதான்.. மாதம் ரூ.300-க்கு முடிச்சாச்சு.. 365 நாட்களுக்கு வாய்ஸ்.. 2.5ஜிபி டேட்டா.. புதுசு இல்ல!
மத்திய தொலைத்தொடர்பு துறையின் உத்தரவின்படி வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை (Annual Prepaid Plan) முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கொடுத்தது. ஆனால், தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் வருடாந்திர திட்டத்தில் மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டமாக ரூ.3599 திட்டம் மட்டுமே இருக்கிறது. மாதாந்திரம் ரூ.300-க்கும் மலிவான விலையில் சலுகைகளை கொடுக்கும் இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ நிறுவனத்தில் வெறும் ரூ.1748 விலைக்கு வருடாந்திர திட்டம் தொடங்குகிறது. ஆனால், இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. அதிலும், எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரிக்கு கிடைக்காது. லம்ப்-சம் சலுகையில் மொத்தமாக கொடுக்கப்படும். ஆகவே, டேட்டாவுடன் கம்மியான விலைக்கு ரூ.3,599 திட்டம் இருக்கிறது.

ஏனென்றால், இதற்கு அடுத்து ரூ.3,999 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இப்போது, உங்களுக்கு புரிந்திருக்கும், மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டம் எது என்று, இருப்பினும் ரூ.3,599 திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை பார்த்துவிட்டு கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் விவரங்கள் பின்வருகிறது.
ஜியோ ரூ 3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): முன்கூட்டியே சொன்னதை போல, இந்த வருடாந்திர திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளானது தினசரி வரம்பில் கொடுக்கப்படும். கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) பயன்படுத்த கிடைக்கும். நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வருகிறது.
இதை 365 நாட்களுக்கு கணக்கிட்டால், உங்களுக்கு 912 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது திட்டத்துக்கு கிடைக்கும் டேட்டாவாக இருக்கிறது. அதுவே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறும் கஸ்டமர்களுக்கு இந்த டேட்டா இல்லாமலேயே இலவசமாக அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக நாளொன்றுக்கு கிடைக்கும் 2.5 ஜிபிக்கு பிறகும் சலுகை இருக்கிறது.
அதாவது, ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு உங்களுக்கு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா சலுகைகள் எல்லாமே வருடம் முழுவதும் கிடைப்பதால், கூடுதல் டேட்டா வவுச்சர்களுக்கு இதில் இடமில்லை. இந்த டேட்டாவை போலவே வருடம் முழுவதும் அன்லிமிடெட் சலுகையில் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.
அதாவது, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) வருடம் முழுவதும் பெற்று கொள்ளலாம். இதில் தினசரிக்கு 100 என்னும் கணக்கில் 365 நாட்களுக்கு எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளுக்கு மேலும் ஜியோ ஆப்களின் சலுகை வருகிறது. ஆனால், ஜியோ சினிமா கிடைக்காது.
ஆகவே, ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப்களை மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம். இதில் ஜியோ டிவியில் பிரீமியம் சலுகைகள் கிடைக்காது, இலவசமாக வரும் கன்டென்ட்களை கஸ்டமர்கள் பார்த்து கொள்ளலாம். இதைவிட மலிவான விலையில் கிடைக்கும் ரூ.1748 திட்டம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சலுகைகள் புரியவரும்.
ஜியோ ரூ 1748 திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Plan Details): இந்த வருடாந்திர திட்டத்தில் 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். முந்தைய திட்டத்தில் பார்த்த ஜியோ டிவி வருகிறது. ஆனால், அதை பயன்படுத்துவதற்கான டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








