Home
News

விட்டாரு பாரு அம்பானி.. மாதாந்திரம் ரூ.300-க்கு இறக்கிய 365 நாட்கள் திட்டம்.. Jio கஸ்டமர்கள் குஷிதான்.. ஆனால்?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்த பிறகும் மலிவு விலை திட்டங்கள் அந்த நிறுவனத்தில் மட்டுமே கிடைக்கிறது. இப்போது, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை வருடாந்திர வேலிடிட்டிகுக்கு கொடுப்பதில் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களை தூக்கி சாப்பிட்டுள்ளது. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்கள் அதிகரித்தாலும், இப்போதைக்கு ஜியோ மட்டுமே முதலிட்டத்தில் நிற்கிறது.

டெலிகாம் (Telecom) கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல்லில் மட்டுமே மலிவாக திட்டங்கள் கிடைப்பதால், அந்த நிறுவனத்துக்கு கஸ்டமர்கள் மாற தொடங்கி இருக்கின்றனர். உண்மையில், பிஎஸ்என்எல் இன்றளவும் 3ஜி, 2ஜி சேவைகளையே அதிகமாக வழங்கி வருகிறது. இது 8 ஆண்டுகளுக்கு முன்பு டெலிகாம் மார்கெட் இருந்ததை போன்ற அதே நிலைதான்.

விட்டாரு பாரு அம்பானி.. மாதாந்திரம் ரூ.300-க்கு இறக்கிய 365 நாட்கள்!

மறுபுறம் 8 ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி சேவைகளை கொடுத்துவிட்டு இப்போது நாடு முழுவதும் 5ஜி சேவைகளுக்கு ஜியோ சென்றுவிட்டது. ஆகவே, எப்படி பார்த்தாலும் ஜியோ நிறுவனத்தில் மட்டுமே ஹை-ஸ்பீடு டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இப்போது வந்துள்ள வருடாந்திர திட்டமும் அப்படியான சலுகையையே கொடுக்கிறது.

ஜியோ ரூ 3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): இந்த வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தின் (One Year Recharge Plan) விலையை பார்த்தால், கஸ்டமர்களுக்கு கூடுதலாக தெரியலாம். ஆனால், இதற்கான மாதாந்திர செலவு வெறும் ரூ.299 மட்டும்தான். இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டால், இது மட்டுமே மலிவான விலையில் கிடைக்கிறது.

அதாவது, அதிகப்படியான டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற முக்கிய சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

அதேபோல 100 எஸ்எம்எஸ்களை நாள்தோறும் செய்து கொள்ள முடியும். டேட்டா சலுகையில் இந்த திட்டம் பட்டையை கிளப்புகிறது. அதாவது, நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டியில் மொத்தமாக 912.5 ஜிபி டேட்டாவை ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த தினசரி டேட்டா சலுகை போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் வெல்கம் ஆபர் பெறும் ஜியோ கஸ்டமர்களுக்கு இந்த 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும், வழக்கமான ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களின் சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஆகவே, டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் 365 நாட்களுக்கும் வேண்டுமானால் மாதத்துக்கு ரூ.299 செலவில் கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். ஒருவேளை இதைவிட மலிவான விலையில் வருடாந்த திட்டம் வேண்டுமானால், வாய்ஸ் கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ரூ.1899 மதிப்பிலான திட்டத்துக்கு செல்லுங்கள்.

இந்த திட்டத்தில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், அந்த நாட்களுக்கு மொத்தமாகவே 24 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இருப்பினும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை வருடம் முழுவதும் கொடுக்கப்படும். ஆகவே, டேட்டாவுக்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3599 Plan With Unlimited Voice Calls 912GB Data 365 Days Validity Best One Year Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X