Home
News

அம்பானிக்கு கும்பிடு.. மாசம் ரூ.300-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. தீபாவளி ஆபருடன் Jio ரீசார்ஜ்.. 2.5GB டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கஸ்டமர்கள் அடிச்சு புடிச்சு ரீசார்ஜ் செய்யும்படி மாதத்துக்கு வெறும் ரூ.300-க்கும் கம்மியான விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 912 ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளை 365 நாட்களுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் தீபாவளி சலுகையும் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

ஜியோவின் வருடாந்திர திட்டங்களில் (Jio Yearly Plans) அதிகப்படியான கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்வது இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) மட்டுமே. ஏனென்றால், 4ஜி டேட்டாவே அதிகப்படியாக இருக்கும் நேரத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுபோக ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. இப்போது தீபாவளி சலுகையும் கைக்கோர்த்துள்ளது.

அம்பானிக்கு கும்பிடு.. மாசம் ரூ.300-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி வருது!

ஜியோ ரூ 3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): இந்த ஒரு வருட திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்தலாம். இந்த டேட்டா மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 2.5 ஜிபி வீதம் 4ஜி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆகவே, 5ஜி வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 4ஜி வேகத்தில் 912 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு லிமிட் இல்லாமல், இந்த திட்டம் டேட்டாவை கொடுக்கும். இப்போது, வாய்ஸ் கால்கள் சலுகைக்கு வருவோம். இந்த திட்டத்தின் 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் (Unlimited Voice) கிடைக்கிறது.

இந்த சலுகை மூலம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதை நாளொன்றுக்கு அனுப்பி கொள்ளலாம். ஓடிடி சலுகைகளை பார்க்கையில், பிரீமியம் அல்லாத கன்டென்ட்களை கொடுக்கும் ஜியோசினிமா (JioCinema) கிடைக்கிறது.

அதேபோல ஜியோ டிவி (JioTV) சந்தாவும் பேக் செய்துள்ளது. இந்த ஒரு வருட திட்டத்துக்கு (One Year Plan) மாத செலவை கணக்கிட்டால், வெறும் ரூ.299 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு அதிகப்படியான டேட்டா வருடம் முழுவதும் கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக தீபாவளி தமாகா சலுகை (Diwali Dhamaka Offer) கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

அஜியோ (Ajio), ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) மற்றும் ஸ்விக்கி (Swiggy) நிறுவனங்களில் சலுகைகள் இதில் கிடைக்கின்றன. ஆகவே, அஜியோ மூலம் ரூ.999 ஷாப்பிங் செய்தால், ரூ.200 மதிப்பில் பிளாட் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். அதேபோல ஈஸ்மைட்ரிப் மூலம் ஃபிளைட் அல்லது ஹோட்டல் புக்கிங்கில் ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

இந்த சலுகைகள் போக ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கில் ரூ.399 மதிப்பில் ஃபுட் ஆர்டர் செய்தால், அதில் ரூ.150 மதிப்பில் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைவிட மலிவான விலையில் ஜியோவில் மற்றொரு வருடாந்திர திட்டமும் இருக்கிறது.

ஆனால், அது வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே பொருந்தும். டேட்டா இருந்தாலும் தேவைக்கு ஏற்பவே கிடைக்கும். ஜியோ ரூ.1899 மதிப்பிலான திட்டமும் 365 நாட்கள் வேலிடிட்டியை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது. இந்த திட்டத்திலும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் இருக்கிறது. ஆனால், டேட்டாவானது 24 ஜிபி மட்டுமே கிடைக்கும்.

இதை 336 நாட்களுக்கும் பயன்படுத்த வேண்டும். ஆனால், வாய்ஸ் கால்களை முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் சலுகையாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஸ்எம்எஸ் சலுகையை பார்க்கையில் தினசரிக்கு கிடையாது. 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதை எப்போது தேவையோ அப்போது பயன்படுத்தலாம். ஆகவே, இந்த திட்டம் வாய்ஸ் கால்களுக்கு பக்காவானது.

Best Mobiles in India

English summary
Jio Rs 3599 Plan With Unlimited Voice Calls 2 5 GB Daily Data 365 Days Validity Check One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X