Jio சிம் காட்டில் அடுத்த 1 வருடத்துக்கு மழை.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
புது மாதம் பிறக்க இருக்கிறது. மாதத்துக்கு ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் மீண்டும் செய்ய திட்டமிட்டுருப்பார்கள். இவர்களுக்கு இந்த வருடாந்திர திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கும். ஏனென்றால், மாதத்துக்கு ரீசார்ஜ் செய்வதைவிட வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, செலவு குறையும். அதே நேரத்தில் சலுகைகளும் அதிகமாக கிடைக்கும்.
அதாவது, 1 மாதத்துக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டு, தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், பிரீமியம் ஓடிடி சந்தா போன்ற சலுகைகளை எதிர்பார்த்தால், ரூ.399 விலை கொண்ட ஜியோ திட்டத்தையே ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இதிலும் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

அதுவே, ஜியோ ரூ.3,599 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், இதே சலுகைகள் வருடம் முழுவதும் கிடைக்கும். அதாவது, 12 மாதங்களுக்கு கிடைக்கும். ஆகவே, 1 மாதத்துக்கு ஏற்படும் செலவை வகுத்து பார்த்தால், ரூ.299 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படும். ஆகவே, ரூ.100 விலை கம்மியாக அதே சலுகைகளை பெறலாம். இது வருடாந்திர திட்டத்தை பெறும்போது மட்டுமே கிடைக்கிறது.
ஜியோ ரூ.3599 திட்டம் (Jio Rs 3599 Plan): ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படும் வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது. ஏனென்றால், ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும். டேட்டா சலுகைகளுக்கு வருடம் முழுவதும் கவலை இருக்காது. ஏனென்றால், வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) போக, 2.5 ஜிபி தினசரி டேட்டா உள்ளது.
ஆகவே, 5ஜி ஸ்மார்ட்போன் வைத்து இருந்தால், எந்த லிமிட்டும் இல்லாமல் வருடம் முழுவதும் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரத்தில் 4ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் நாளொன்றுக்கு குறையில்லாதபடி 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இது ஓடிடி பிரியர்கள், கேமிங் பிரியர்களாக இருந்தாலும் தாக்குப்பிடிக்கும் டேட்டாவாக இருக்கிறது.
இதில் 2.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுக்கப்படும். 5ஜி கஸ்டமர்களுக்கு போஸ்ட் டேட்டா தேவைப்படாது. ஒரே வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு ஏற்ப ஓடிடி சலுகையையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. ஆனால், ஓடிடி சந்தா மட்டும் முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
அதாவது, இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதை ரீசார்ஜ் செய்த முதல் 3 மாதங்களுக்கு ஜியோஹாஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்கு ஜியோ மொபைல் நம்பரை வைத்து மட்டுமே லாகின் செய்ய வேண்டும். இதேபோல ஜியோ மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்யும்படி ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கிடைக்கிறது.
இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். ஜியோ கிளவுட் ஆப்பை டவுன்லோட் செய்து மொபைல் நம்பரை கொடுத்தால் போதும், இந்த கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். ஜெமினி ப்ரோ (Gemini Pro) என்னும் ஏஐ சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதை 1 வருடத்துக்கு மேல் பயன்படுத்த முடியும். 18 மாதங்களுக்கு சந்தா கொடுக்கிறது.
ஆகவே, 12 மாதங்கள் வேலிடிட்டி முடிந்த பிறகு அன்லிமிடெட் 5ஜி திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், இதை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வழக்கமாக கொடுக்கப்படும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகள் கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். ஜியோ டிவி சந்தாவும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications