இனிமே மாசம் ரூ.299-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் Jio திட்டத்த விடமாட்டீங்க.. புது ஆஃபர் முடியல சார்!
ஜியோ கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் ஓடிடி ஆப்களையும் கொடுக்கும் வருடாந்திர திட்டத்தை (Yearly Plan) கண்ணை மூடிக் கொண்டு ரீசார்ஜ் செய்யும்படியான சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் கிட்டத்தட்ட இலவசம் போலத்தான் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. ஏனென்றால், ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையைவிட சலுகைகள் அதிகமாக கிடைக்கிறது. எந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) அது? அந்த திட்டத்தின் சலுகைகள் என்ன? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.3599 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.3650 மதிப்பிலான இலவச சலுகைகளை கொடுத்தது. ஆகவே, திட்டத்தின் விலையைவிட ரூ.100 அதிகமாக சலுகைகள் கிடைத்ததால், ரீசார்ஜ் பட்டையை கிளப்பியது. ஆனால், இந்த குடியரசு தின சலுகைகள் அடுத்த சில நாட்களில் முடிந்துவிடும். அதன்பிறகு கிடைக்காது.

இப்படித்தான் ஜியோ கஸ்டமர்கள் நினைத்தனர். ஆனால், இப்போது வரை கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கு வெறும் ரூ.299 செலவில் கிடைக்கும் இந்த ரூ.3599 திட்டத்தில் இலவச சலுகைகள் வேண்டுமானால், இப்போதே ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த வருடாந்திர திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் கூடுலாக கிடைக்கும் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி டேட்டா சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது.
மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவானது, 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு கிடைக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டிக்கு மொத்தமாக 912 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை போலவே வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.
இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும், ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) & ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஆப்களின் சலுகைகளும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.3599ஆக இருக்கிறது என்றால், இப்போது பார்க்கப்போகும் கூடுதல் சலுகைகள் ரூ.3650 மதிப்பில் கொடுக்கப்படுகிறது. அதில் எந்தெந்த சலுகைகள் இருக்கின்றன?
ரூ.500 மதிப்பிலான அஜியோ (AJIO) ஷாப்பிங் கூப்பன்கள் 2 கொடுக்கப்படுகிறது. இந்த கூப்பன்களை ரூ.2999 மதிப்பிலான ஆர்டர்களை செய்யும்போது பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல ரூ.500 மதிப்பிலான டைரா (Tira) ஷாப்பிங் கூப்பன்கள் 2 கொடுக்கப்படுகிறது. இந்த கூப்பன்களை பயன்படுத்தி கொள்ள ஜியோ கஸ்டமர்கள் ரூ.999 மதிப்பிலான ஆர்டர்களை செய்ய வேண்டும்.
ஆகவே, இந்த 4 கூப்பன்கள் மூலமே ரூ.2000 மதிப்பில் சலுகைகள் கிடைக்கிறது. மேலும், ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) மூலம் டிக்கெட் புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு, ரூ.1500 ஆஃபர் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதில் பிளைட் டிக்கெட் புக் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே ஆஃபர் கிடைக்கும். இதற்கு அடுத்து ஸ்விக்கி (Swiggy) ஃபுட் ஆர்டருக்கு ரூ.150 ஆஃபர் கிடைக்கிறது.
இதில் ரூ.499 மதிப்பில் ஃபுட் ஆர்டர் இருக்க வேண்டும். ஆகவே, இந்த மொத்த கூப்பன்களின் மதிப்பை கணக்கிட்டால் ரூ.3650 கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த ஜியோ வருடாந்திர திட்டத்துக்கு மாதம் செலவாகும் தொகையை பார்த்தால், ரூ.299ஆக இருக்கிறது. ஆனால், இப்போது கிடைக்கும் சலுகைகளின்படி பார்த்தால், இது நல்ல லாபம் தரக்கூடிய திட்டமாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








