Home
News

தூக்கி சாப்பிட்ட ஜியோ.. இனிமே ஒரு ரீசார்ஜ் போதும்.. 365 நாட்களுக்கு வாய்ஸ்.. 2.5 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!

முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் மாதத்துக்கு வெறும் ரூ.299 செலவில் கிடைக்கும் வருடாந்திர திட்டத்தில் (Annual Plan) எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் கொடுக்க முடியாத சலுகைகளை இப்போது கொடுக்கிறது. ஏற்கனவே கிடைத்த சலுகைகளுடன் இலவச ஓடிடி (Free OTT) சந்தா மற்றும் இலவச கிளவுட் டேட்டாவை (Free Cloud Data) சேர்த்துள்ளது. இந்த ஜியோ வருடாந்திர திட்டத்தின் பழைய சலுகை மற்றும் புதிய சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, நாம் பார்க்க இருப்பது ஜியோ ரூ 3599 வருடாந்திர திட்டத்தின் (Jio Rs 3599 Annual Plan) சலுகைகளைத்தான். 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்துக்கான மாத செலவு ரூ.299ஆக இருக்கிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி டேட்டா, போஸ்ட் டேட்டா மட்டுமல்லாமல், கிளவுட் டேட்டாவையும் இப்போது கொடுக்கிறது.

தூக்கி சாப்பிட்ட ஜியோ.. இனிமே ஒரு ரீசார்ஜ் போதும்.. 365 நாட்கள் சேவை!

இந்த டேட்டா சலுகைகள் போக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தாவை பெறலாம். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வருடம் முழுவதும் கிடைக்கிறது. இந்த நாளொன்றுக்கு கிடைக்கும் டேட்டாவை முழுவதும் முடித்துவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது.

இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, இந்த திட்டத்தில் டேட்டாவுக்கு பஞ்சமில்லை என்று அடித்து சொல்லலாம். இது வழக்கமான சலுகைகளாக இருக்கிறது. ஆனால், இப்போது புதிதாக 50 ஜிபிக்கான ஜியோஏஐகிளவுட் (JioAICloud) டேட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதை கூகுள் டிரைவ் போல இலவசமாக ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் ஜியோ கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. அதே நாட்களுக்கு தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் செய்ய கிடைக்கிறது.

இதுபோக ஜியோடிவி (JioTV) சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. மேற்கண்ட சலுகைகள் மட்டுமே வழக்கமாக கிடைத்துவந்தன. ஆனால், ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஆகிய ஓடிடி தளங்கள் இணைத்துவிட்டதால், புதிய ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை ஜியோ நிறுவனம் இலவமாக கொடுக்க தொடங்கி இருக்கிறது.

ஆகவே, இந்த வருடாந்திர திட்டத்துக்கும் இப்போது கூடுதலாக ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படுகிறது. இருப்பினும், இந்த சந்தாவை 365 நாட்கள் முழுவதும் பயன்படுத்த முடியாது. ரீசார்ஜ் செய்த பிறகு முதல் 90 நாட்களுக்கு மட்டுமே சந்தா கிடைக்கிறது. அதேபோல மொபைல் சலுகைகளை மட்டுமே இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கும்.

இந்த ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகளை ஒரே ஜியோ நம்பரில் மட்டுமே பெற்று கொள்ள முடியும். மேற்கண்ட சலுகைகளை இந்த ஜியோ ரூ 3599 வருடாந்தி திட்டம் கொடுக்கிறது. ஜியோஹாட்ஸ்டார சந்தா இலவமாக வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதையடுத்து மற்றொரு வருடாந்திர திட்டம் இருக்கிறது.

இது ரூ.3999 விலைக்கு கிடைக்கிறது. இதிலும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 5ஜி டேட்டா மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகை கிடைக்கிறது. ஆனால், ஃபேன்கோட் (Fancode) ஓடிடி சந்தாவை கூடுதலாக கொடுக்கிறது. இந்த சந்தாவுடன் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் பயன்படுத்த கிடைக்கும்.

FAQs
ஜியோ ஏஐ கிளவுட் என்றால் என்ன?

ஜியோ ஏஐ கிளவுட் என்பது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மூலம் வழங்கப்படும் கிளவுட் ஸ்டோரேஜாகும். இதில் 100 ஜிபி வரையில் இலவச ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. மேலும், ஏஐ மெமரிஸ்,ஏஐ ஸ்கேனர் போன்ற ஏஐ பவர்ட் டேட்டா சேவையை இது கொடுக்கிறது. கூகுள் டிரைவ், ஒன்டிரைன் போல செயல்படுகிறது.

ஜியோஹாட்ஸ்டார் என்றால் என்ன?

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி நிறுவனங்கள் இணைந்து, ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியாக வெளியாகி இருக்கிறது. ஆகவே, இரண்டு ஓடிடி ஆப்களிலும் கிடைத்த மூவிக்கள், ஷோக்கள் மற்றும் சீரிஸ்கள் ஒரே ஆப் மூலம் பார்த்து கொள்ளலாம். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் போன்றவை இப்போது ஜியோஹாட்ஸ்டாரில் கிடைக்கின்றன.

GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3599 Plan With 365 Days Validity Unlimited Voice Calls JioHotstar Check Jio Annual Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X