Home
News

அதான் அம்பானி.. இதுதான் இனிமே.. ஒன்னு 365 நாட்கள்.. இல்லனா 28 நாட்கள் வேலிட்டி.. 3 ப்ரீபெய்ட் திட்டம்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட (Tariff Hikes) பிறகு 2.5 ஜிபி டேட்டா சலுகையுடன் 3 திட்டங்கள் மட்டுமே கஸ்டமர்களுக்கு கிடைக்கின்றன. இனிமேல் ரீசார்ஜ் செய்தால், இவற்றில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அதில் 2 திட்டங்கள் 365 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, ஓடிடி போன்ற பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. இந்த 2.5ஜிபி டேட்டா திட்டங்களின் (2.5GB Data Plan) முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்துக்கு (Jio Prepaid Plan) 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, 70 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது.

அதான் அம்பானி.. இதுதான் இனிமே.. ஒன்னு 365 நாட்கள்.. இல்லனா 28 நாட்கள்!

மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) மற்றும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். ஓடிடி சலுகை கிடையாது. இருப்பினும், ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) சலுகை கிடைக்கிறது.

ஜியோ ரூ 3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): இதுவொரு வருடாந்திர ஜியோ திட்டமாகும். ஆகவே, 365 நாட்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் வருகிறது.

முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆப்களின் சலுகை கிடைக்கிறது. இந்த 365 நாட்கள் திட்டத்திலும் ஓடிடி சலுகைகள் கிடையாது. அடுத்த திட்டத்தில் இருக்கிறது.

ஜியோ ரூ 3999 திட்ட விவரங்கள் (Jio Rs 3999 Plan Details): இந்த ஜியோ வருடாந்திர திட்டத்தில் (Jio Yearly Plan) சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, போஸ்ட் டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி சந்தாவும் (OTT Subscription) கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, முந்தைய திட்டத்தை போலவே 912.5 ஜிபி டேட்டாவை மொத்தமாக பெற்று கொள்ளலாம்.

அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். மேலும், முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ள முடிகிறது.

இந்த திட்டத்தில் ஓடிடி சலுகை கிடைக்கிறது. அதுவும் கிரிக்கெட் பிரியர்களை தட்டித்தூக்கும்படி ஃபேன்கோட் (FanCode) ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 1 வருடத்துக்கு பயன்படுத்தலாம். அதேபோல ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆப்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஜியோவில் 2.5 ஜிபி டேட்டா திட்டங்களை தேர்ந்தெடுக்கும் கஸ்டமர்களுக்கு இந்த மூன்று திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. மாதாந்திர வேலிடிட்டி வேண்டுமானால், முதல் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இல்லையென்றால், 365 நாட்கள் மட்டுமே ஆப்ஷனாக வருகிறது. 56 நாட்கள், 84 நாட்கள் என்று வேறு திட்டங்கள் கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3599 Plan With 365 Days Validity 912GB Data Unlimited Voice Calls Check 2 5GB Data Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X