Home
News

ரூ.300-க்கு இறக்கிய அம்பானி.. மாத செலவுதான்.. இதுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. Jio குஷி!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், என்னதான் விலையேற்றினாலும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் கம்மி விலைக்கு அதிவேக டேட்டா மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகளை கொடுத்து கஸ்டமர்களை தொடர்ந்து கட்டிப்போட்டு வருகிறது. இப்போது, 5 வருடாந்திர திட்டங்களில் (Yearly Plans) தட்டித்தூக்கி இருக்கிறது. மாதத்துக்கு ரூ.300-க்கும் கம்மியான செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற அனைத்தையும் கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளாம்.

ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): ஜியோ நிறுவனத்தில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும், வருடாந்திர திட்டம் இதுவாகும். ஆனால், ஜியோபோன் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 4ஜி வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 336 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) பெறலாம்.

ரூ.300-க்கு இறக்கிய அம்பானி.. மாத செலவுதான்.. இதுக்கு 365 நாள் சேவை!

28 நாட்கள் வீதம் 2 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ளலாம். 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் வழக்கமாக ஜியோவில் கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை பெறலாம். ஜியோ ஆப்களான ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோ ரூ 1234 திட்ட விவரங்கள் (Jio Rs 1234 Plan Details): இந்த ஜியோ வருடாந்திர திட்டம் ஜியோபாரத் போன் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 500 எம்பி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.

28 நாட்கள் வீதம் 300 எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். வாய்ஸ் கால்களை பொறுத்தவரையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். மேலும், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களின் சலுகையும் வருகிறது. இப்போது, பொதுவான ஜியோ திட்டங்களை பார்ப்போம்.

ஜியோ ரூ 1899 திட்ட விவரங்கள் (Jio Rs 1899 Plan Details): இந்த வருடாந்திர திட்டத்துக்கும் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இது ஜியோபோன் அல்லது ஜியோபாரத் போன் கஸ்டமர்களுக்கு கிடையாது. வழக்கமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஜியோ கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, அவர்களுக்கு மலிவாக கிடைக்கும் ஒரு வருட திட்டம் இதுமட்டுமே.

ஆனால், டேட்டாவை பொறுத்தவரையில் 24 ஜிபி மட்டுமே மொத்தமாக வழங்கப்படுகிறது. இதை வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் நாள்தோறும் கிடைக்கிறது. 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது, தினசரி டேட்டா கொடுக்கும் வருடாந்திர திட்டங்களை பார்ப்போம்.

ஜியோ ரூ 3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): இந்த வருடாந்திர திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு மாதம் ரூ.299 மட்டுமே செலவாகிறது. ஆகவே, ரூ.300-க்குள் பெஸ்ட் வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது.

ஜியோ ரூ 3999 திட்ட விவரங்கள் (Jio Rs 3999 Plan Details): ஜியோவில் அதிகபட்ச விலை கொண்ட வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. அதேபோல 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் சலுகை இருக்கிறது. கூடுதலாக பேன்கோட், ஜியோடிவி பிரீமியம், ஜியோசினிமா பிரீமியம் சந்தாவை கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 3599 Plan With 365 Days Validity 912 Data Unlimited Voice Calls Check Yearly Plans 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X