கேபிள் TV-ஐ முடித்த Jio.. 1000+ டிவி சேனல்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!
கேபிள் டிவிக்கு நிகராக லைவ் டிவி சேனல்களை வருடம் முழுவதும் கொடுக்கும்படியான திட்டத்தை ஜியோ நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தாவுடன் லைவ் டிவி சேனல்களும் கிடைக்கும்.
ஜியோ நிறுவனத்தின் மெகா ஆண்டுவிழா சலுகையில் (Mega Anniversary Offer) வருடம் முழுவதும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription), ஜியோடிவி ப்ரோ பேக் (JioTV Pro Pack) சந்தா (1000+ டிவி சேனல்கள்), 120 ஜிபிக்கான டேட்டா பூஸ்டர் மற்றும் 50 ஜிபிக்கு ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த மெகா ஆண்டுவிழா சலுகையானது, ஜியோ ரூ.3599 திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்தில் கிடைக்கும் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகள் போக கூடுதலாக இந்த சலுகைகள் கிடைக்கும்.
ஜியோ ரூ.3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும்.
நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 4ஜி வேகத்தில் கிடைக்கும் இந்த டேட்டா முடிந்த பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் இந்த திட்டம் வருடம் முழுவதும் கொடுக்கிறது. 5ஜி ஸ்மார்ட்போன் கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கப்படும். இந்த சலுகைகள் வழக்கமாக ஜியோ ரூ.3599 திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளாக இருக்கின்றன. இப்போது, மெகா ஆண்டுவிழா சலுகையாக வருடம் முழுவதும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது. ரூ.55 விலை கொண்ட ஜியோடிவி ப்ரோ பேக்கானது, 12 மாதங்களுக்கு தாலா 1 கொடுக்கப்படுகிறது.
ஆகவே, வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். ஜியோ டிவி வழியாக மட்டுமே இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ள முடியும். மேலும், 120 ஜிபிக்கு டேட்டா பூஸ்டர் (Data Booster) கிடைக்கிறது. அதாவது மாதம் 10 ஜிபிக்கு டேட்டா பூஸ்டர் கிடைக்கும். 12 மாதங்களுக்கு 120 ஜிபி டேட்டாவை பெறலாம்.
இந்த டேட்டா முற்றிலும் கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை. கூடுதலாக பயன்படுத்தி கொள்ளலாம். 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இதை ஜியோஏஐகிளவுட் (JioAICloud) வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 3 கூடுதல் சலுகைகளும் இருக்கிறது.
ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) வழியாக விமான டிக்கெட் புக் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.2,200 வரையில் தள்ளுபடி கொடுக்கப்படும். அஜியோ (AJIO) வழியாக ரூ.1000 மேல் ஷாப்பிங் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.200 தள்ளுபடி கொடுக்கப்படும். மேலும், சினிபொலிஸ் வழியாக ரூ.550 மதிப்பில் 2 டிக்கெட்டுகளை புக் செய்தால், ரூ.150 தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
