ஒரே Jio ரீசார்ஜ்.. 12 மாசத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. டேட்டா.. 90 நாட்கள் ஓடிடி.. குஷியில் கஸ்டமர்கள்!
ஒரே ரீசார்ஜில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகிய சலுகைகள் 365 நாட்களுக்கும், பிரீமியம் ஓடிடி சந்தா (Premium OTT Subscription) 90 நாட்களுக்கும் கிடைத்தால் ஜியோ (Jio) கஸ்டமர்கள் குஷியாகாமல் என்ன செய்வார்கள்? அப்படியான ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இப்போது பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ஜியோ திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.
ஜியோ கஸ்டமர்கள் மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யாமல், வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் அவர்களுக்கு மொத்த செலவு குறையும். அதே நேரத்தில் டேட்டாவும் கூடுதலாக கிடைக்கும். அதாவது, 28 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், 5ஜி டேட்டா, 100 எஸ்எம்எஸ்களுக்கு ரூ.349 தேவைப்படுகிறது.

ஆகவே, 12 மாதங்களுக்கு இதே போல ரீசார்ஜ் செய்தால் ரூ.4,188 செலவாகிறது. ஆனால், மேற்கண்ட சலுகைகளை ஒரே ரீசார்ஜ் மூலம் 365 நாட்களுக்கும் கிடைக்கும்படியான திட்டத்தை பெற்றால், அதன் விலை ரூ.3,599ஆக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் கூடுதல் டேட்டாவும் கிடைக்கிறது. இப்போது, 90 நாட்களுக்கு இலவச ஓடிடி சந்தாவும் கிடைப்பதால், லாகரமான திட்டமாக அது மாறி இருக்கிறது.
ஜியோ ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 Prepaid Plan): ஜியோவின் கட்டண உயர்வுக்கு பிறகு இந்த வருடாந்திர திட்டம் (Yearly Plan) அதிகப்படியாக ரீசார்ஜ் செய்யப்படும் திட்டமாக மாறி இருக்கிறது. ஏனென்றால், வருடம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், தினசரிக்கும் 2.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இது மிகவும் அதிப்படியான டேட்டா சலுகையாகும்.
இதுபோக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், போஸ்ட் டேட்டா மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை கிடைத்தது. இதுவே நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. ஆனால், ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தில் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை ஆட் செய்து மேலும் வரவேற்பு பெற செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2.5 ஜிபி டேட்டா வருகிறது.
ஆகவே, 365 நாட்களுக்கு கணக்கிட்டால், 900 ஜிபிக்கும் அதிகமான டேட்டா கிடைக்கும். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், அதற்கு மேலும் கஸ்டமர்கள் டேட்டாவை பெற்று கொள்ள முடியும். இதனிடையே வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும், டேட்டாவில் குறையிருக்காது.
இந்த டேட்டாவை போல வாய்ஸ் கால்களும் கிடைக்கின்றன. லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் சலுகையில் செய்து கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் தினசரிக்கு செய்ய கிடைக்கின்றன. ஜியோ ஆப்களின் சலுகைகளை பார்க்கையில் ஜியோ டிவி (Jio TV) சந்தா கிடைக்கிறது.
ஆனால், ஜியோ கிளவுட் சலுகை இப்போது ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) சலுகையாக கிடைக்கிறது. இந்த சலுகை மூலம் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் ஜியோ கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா இப்போது கிடைக்கிறது. இதை 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
அதாவது, இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், அதில் 90 நாட்களுக்கு மட்டுமே ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பெற்று கொள்ள முடியும். இந்த இலவச ஓடிடி சந்தாவும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதற்கு பிறகு ஓடிடி தவிர மற்ற அனைத்து சலுகைகளும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications