Home
News

இனிமே முடிந்தது.. மாதம் ரூ.299-க்கு அடிச்ச அம்பானி.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2.5ஜிபி டேட்டா!

இந்த ரீசார்ஜ்தானா முடிந்தது விடுங்க, நாங்க பாத்துக்கறோம், அப்டினு ஜியோ (Jio) கஸ்டமர்கள் அறக்க பறக்கும்படி மாதத்துக்கு ரூ.299 பட்ஜெட்டில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினந்தோறும் டேட்டா (Daily Data), எஸ்எம்எஸ் (SMS) போன்ற முக்கிய சலுகைகள் 365 நாட்களுக்கு கிடைப்பது மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையையும் வாரி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சலுகைகள் என்ன? வருடத்துக்கு எவ்வளவு செலவாகிறது?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட நாளில் இருந்து, எந்தவொரு ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும் அதில் எவ்வளவு சலுகைகள் கிடைக்கிறது? டேட்டா எவ்வளவு? 5ஜி டேட்டா கிடைக்கிறதா? உள்ளிட்ட அனைத்தையும் கஸ்டமர்கள் பார்க்க தொடங்கிவிட்டனர்.

இனிமே முடிந்தது.. மாதம் ரூ.299-க்கு அடிச்ச அம்பானி.. 365 நாட்கள் சேவை!

அதிலும், மாதத்துக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை பார்த்துவிட்டு, இதற்கு வருடாந்திர திட்டத்தையே ரீசார்ஜ் செய்துவிடலாம் என்று நினைக்கின்றனர். இவர்களுக்காகவே ஒட்டுமொத்த சலுகைகளுடன் ஜியோ ரூ.3,599 திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு கனவிலும் குறையிருக்காது. அதுமட்டுமல்லாமல், மாதம் ரூ.299 செலவில் வருகிறது.

ஜியோ ரூ 3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): இந்த வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் (Annual Recharge Plan) சலுகைகளுக்கு எந்தவித குறையும் கிடையாது. ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஏனென்றால், 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் ஜியோ கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இதுபோக 4ஜி டேட்டாவும் அதிகப்படியாக கிடைக்கிறது. அதாவது, 2.5 ஜிபி வீதம் நாளொன்றுக்கு கிடைக்கிறது. இந்த 2.5 ஜிபி டேட்டாவே அதிகமாக இருக்கும். இருப்பினும், 5ஜி டேட்டா வருவதால், ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்கள் கவலையில்லாமல் டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (Post Data) கிடைக்கிறது.

ஆகவே, 912 ஜிபி டேட்டா போக 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவை போலவே 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். எஸ்எம்எஸ் சலுகையும் அப்படித்தான் தினந்தோறும் 100 வீதம் 365 நாட்களுக்கும் கிடைக்கிறது.

மேற்கண்ட டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகள் போக ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களின் சந்தாவும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த ஆப்களில் ப்ரீமியம் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், கிரிக்கெட் உள்ளிட்ட லைவ் கன்டென்ட்கள் கிடைக்கும்.

கட்டண உயர்வுக்கு முன்பு ஜியோவில் பல்வேறு வருடாந்திர திட்டங்கள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 2 திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. மேற்கண்ட திட்டம் முதலாவது திட்டமாக இருக்கிறது. மற்றொரு திட்டம் ரூ.3,999 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக ஓடிடி சலுகை கிடைக்கிறது. அதவும் கிரிக்கெட் பிரியர்களுக்கு ஏற்ப கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த வருடாந்திர திட்டத்திலும் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் 2.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இந்த சலுகைகளுக்கு பிறகு கிரிக்கெட் பிரியர்களுக்கான ஃபேன்கோட் சந்தா கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3599 Plan Offer 365 Days Validity Unlimited Voice Calls 912GB Data Check Annual Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X