Home
News

OG சம்பவத்த பண்ண அம்பானி.. மாசம் ரூ.299 க்கு 365 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா, எஸ்எம்எஸ்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் கொடுக்கும் சலுகைகளில் முகேஷ் அம்பானி எப்போதும் ஓஜி சம்பவம்தான் செய்துள்ளார். இப்போது, மாதத்துக்கு ரூ.299 செலவில் கிடைக்கும் திட்டத்தில் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் கொடுப்பது மட்டுமல்லாமல், டிஜிட்டல் கோல்டு, ஜியோஹோம், ஜியோஹாட்ஸ்டார், ஜியோ ஏஐ கிளவுட் டேட்டா போன்ற சலுகைகளும் வந்துள்ளது. இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் (Yearly Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 Prepaid Plan): ஜியோ கஸ்டமர்களுக்கு தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் ஆரம்ப விலை வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆகவே, ஒரு வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ்களின் சலுகைகள் கிடைக்கும்.

OG சம்பவத்த பண்ண அம்பானி.. மாசம் ரூ.299 க்கு 365 நாட்கள்.. வாய்ஸ்!

ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படும். தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.

இந்த தினசரி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா போக 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படும். 2.5 ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு கணக்கிட்டால் மொத்தமாக 912 ஜிபி கிடைக்கிறது. இந்த டேட்டாவை போலவே தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

இந்த சலுகைகள் மட்டுமே முன்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது கூடுதல் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. அதிலும் இலவசமாக சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலம் டிஜிட்டல் கோல்டு வங்கினால், கூடுதலாக 2 சதவீத டிஜிட்டல் கோல்டு இலவமாக கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தை பெற்ற பிறகு வாங்கும் டிஜிட்டல் கோல்டுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இந்த டிஜிட்டல் கோல்டு சலுகைக்கு அடுத்து இலவச சலுகையாக ஜியோ ஹோம் (JioHome) கிடைக்கிறது. இந்த ஜியோ ஹோம் திட்டத்தில் வை-பை டேட்டா சலுகை, வை-பை வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும்.

இதுபோக லைவ் டிவி சேனல்களின் (Live TV Channels) சந்தாவும் கிடைக்கும். இதற்கான வை-பை ரூட்டர் மற்றும் செட்-டாப் பாக்ஸ் கொடுக்கப்படும். இதை ஜியோ வெப்சைட் மற்றும் மைஜியோ ஆப் மூலம் கஸ்டமர்கள் கிளைம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை போல ஸ்மார்ட்போனில் பார்க்கும்படி ஜியோஹாஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படும்.

இதை 3 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், முதல் 90 நாட்களுக்கு இந்த ஓடிடி சந்தாவை பயன்படுத்த முடியும். இந்த மூன்று சலுகைகளும் போக ஜியோ ஏஐ கிளவுட் டேட்டா (Jio AI Cloud Data) சலுகை கொடுக்கப்படும். இதில் 50 ஜிபிக்கு கிளவுட் டேட்டாவை பெற்று கொள்ள முடியும்.

இதை ஜியோ மொபைல் நம்பர் வைத்தே பயன்படுத்த முடியும். ஆகவே, ஒரே திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களை 365 நாட்களுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல், கூடுதலாக ஜியோ ஹோம், ஜியோ டிஜிட்டல் கோல்டு, ஜியோ ஹாட்ஸ்டார், ஜியோ கிளவுட் டேட்டாவையும் பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3599 Plan 365 Days Validity Unlimited Voice Calls Check Rs 299 Per Monthly Cost Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X