Home
News

அடுத்த 365 நாட்கள்.. Jio சிம் இருந்தா 2026 New Year ஆபரை விட்ராதீங்க.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2.5 ஜிபி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அடுத்த 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் மற்றும் கூடுதல் சலுகைகள் வேண்டுமானால், இந்த திட்டத்தை உடனடியாக ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ. 3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. ஆகவே, 2026 ஆம் ஆண்டு முழுவதும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) கிடைக்கும்.

அடுத்த 365 நாட்கள்.. Jio சிம் இருந்தா 2026 New Year ஆபரை விட்ராதீங்க!

தினமும் 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2.5 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. ஏனென்றால், இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. 365 நாட்களுக்கு 4ஜி வேகத்தில் 912 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு இதுபோன்று கணக்கு கிடையாது. தினமும் 100 எஸ்எம்எஸ்களை 365 நாட்கள் முழுவதும் அனுப்பி கொள்ளலாம். இந்த முக்கிய சலுகைகள் வழக்கமாக திட்டத்துக்கு கிடைக்கிறது. கூடுதல் சலுகைகளை பார்க்கும்போது, ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா 3 மாதங்களுக்கு கொடுக்கப்படும்.

இந்த ஓடிடி சந்தா போக ஜியோஹோம் (JioHome) சந்தாவில் கூடுதலாக ஓடிடி சந்தா கிடைக்கும். மேலும், லைவ் டிவி சேனல்களும் இந்த ஜியோஹோம் திட்டத்தில் கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை 2 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு பிறகு கட்டணம் செலுத்தி தொடர்ந்து கொள்ளலாம். இதை புக்கிங் செய்து மட்டுமே பெற்று கொள்ள முடியும்.

ஆகவே, ஜியோஃபைபர் திட்டங்களை பெறுவதை போலவே இதையும் புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance) ஆப் வழியாக ஜியோ கோல்டு (Jio Gold) என்னும் டிஜிட்டல் கோல்டு சலுகைகளை இந்த திட்டத்தில் பெறலாம். ஆனால், காசு கொடுத்து வாங்கப்படும் கோல்டின் மதிப்பில் 1 சதவீத கோல்டு மட்டுமே இலவமாக கொடுக்கப்படும்.

மேலும், ஜியோ கிளவுட் வழியாக 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோர்ஜ் சலுகை கிடைக்கும். இந்த சலுகைகள் போக அண்மையாகவும், ஜியோ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாகவும் சேர்க்கப்பட்ட ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கு 12 மாதங்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.

இதைவிட கம்மியான விலையில் 2026 ஆம் ஆண்டுக்கான புது வருட திட்டம் வேண்டுமானால், ரூ. 500 விலைக்கு மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் மற்ற சலுகைகள் போக ஓடிடி சலுகைகள் கூடுதலாக கிடைக்கும். அதாவது, 10+ ஓடிடி ஆப்களின் சந்தா இந்த ஒரே திட்டத்துக்கு கொடுக்கப்படும்.

ஜியோ ரூ. 500 திட்ட விவரங்கள் (Jio Rs 500 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் முந்தைய திட்டத்தில் பார்த்த கூடுதல் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். மேலும், யூடியூப் பிரீமியம் மற்றும் அமேசான் பிரைம் சந்தா கிடைக்கும்.

ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் லயன்ஸ்கேட் பிளே சந்தா கிடைக்கும். மேலும், டிஸ்கவரிபிளஸ், சன்நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, பிளாட் மராத்தி, சாவ்பால் மற்றும் ஹோய்சோய் கிடைக்கிறது. பேன்கோட் மற்றும் ஜியோ டிவி சந்தாவும் இந்த புது வருட திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த ஓடிடிகளுக்கும் 28 நாட்கள் மட்டுமே சந்தா கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 3599 Plan 365 Days Validity Unlimited Local STD Roaming Calls Check 2026 New Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X