Jio SIM காட்டில் மழை.. மாதம் ரூ.299 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) வைத்திருக்கும் கஸ்டமர்கள் ஒரே ரீசார்ஜ் வழியாக வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை பெற வேண்டுமானால், இந்த ஜியோ வருடாந்திர திட்டத்துக்கு (Jio Yearly Plan) கண்ணை மூடிக்கொண்டு செல்லலாம். லிமிட் இல்லாமல், டேட்டா சலுகையும் கொடுக்கப்படும்.
வருடாந்திர திட்டங்களை ரீசார்ஜ் செய்வதில் இருக்கும் நன்மை என்னவென்றால், மாத செலவு கம்மியாக இருக்கிறது. ஜியோ ரூ.3599 திட்டத்தில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், மாத செலவை பார்த்தால், ரூ.299 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படும். இந்த விலைக்கு ஒட்டுமொத்த சலுகைகளையும் பெற்று கொள்ளலாம்.

அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை இந்த வருடாந்திர திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக தினசரி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. டேட்டாவில் எந்த குறையையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்காது.
ஜியோ ரூ.3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Detail): அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) வருடம் முழுவதும் செய்து கொள்ளலாம். தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும்.
இந்த தினசரி டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 365 நாட்களுக்கு 912.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடியும். இது அன்லிமிடெட் 5ஜி டேட்டா கணக்கில் வராது. தனியாகவே கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த முக்கிய சலுகைகள் போக ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் சலுகைகளை கொடுத்து இருக்கிறது.
முதலில் ஓடிடி சலுகை இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தவுடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) கொடுக்கப்படும். ஆனால், இந்த சந்தாவை மூன்று மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த சந்தா கிடைக்கிறது. திட்டத்தின் வேலிடிட்டி தொடர்ந்து கிடைக்கும்.
இந்த வருடாந்திர திட்டத்துக்கு ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இதை ஜியோ மொபைல் நம்பர் வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கும் ஜியோ கிளவுட் ஆப் (Jio Cloud App) வழியாக இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், கூகுள் (Google) நிறுவனம் கொடுக்கும் பிரீமியம் ஏஐ சந்தாவான, ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இது திட்டத்தைவிட கூடுதல் நாட்களுக்கு கிடைக்கும். 18 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். இதன் மதிப்பு ரூ.35,100ஆக இருக்கிறது. இமேஜ் ஜெனரேஷன், வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட ஒட்டுமொத்த அணுகல்களும் கிடைக்கும். இந்த சந்தாவில் 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications