Home
News

Airtel, Vi-ஐ முடிச்ச Jio.. 1000+ டிவி சேனல்கள்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2.5GB டேட்டா!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ (Jio), தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நீண்ட கால ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது கூடுதல் சலுகைகளுடன் கவனம் பெற்றுள்ளது.

குறிப்பாக, இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் தொடர்பான கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன.

Airtel, Vi-ஐ முடிச்ச Jio.. 1000+ டிவி சேனல்கள்.. 365 நாட்கள் சேவை!

ஜியோவின் மெகா ஆண்டுவிழா சலுகையின் கீழ் இந்த கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, ஜியோ ரூ.3599 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, ஜியோடிவி ப்ரோ பேக், 120 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கின்றன.

ஜியோ ரூ.3599 திட்ட சலுகைகள்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமே இதன் 365 நாட்கள் வேலிடிட்டி தான். அதாவது, ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் அடுத்த ஒரு வருடத்திற்கு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டத்தின் கீழ் 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை மேற்கொள்ளலாம். மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

டேட்டாவைப் பொறுத்தவரை, தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். தினசரி வழங்கப்படும் 2.5 ஜிபி டேட்டா முழுவதும் பயன்படுத்தப்பட்ட பின்னரும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட்-டேட்டாவை பயன்படுத்தும் வசதி உள்ளது. இதுமட்டுமின்றி, 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

எனவே, 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் கூடுதல் டேட்டா செலவு குறித்து கவலைப்படாமல் இணையத்தை பயன்படுத்த முடியும். இந்த ரூ.3599 திட்டத்தின் கூடுதல் சலுகைகளில் முக்கியமானதாக ஜியோடிவி ப்ரோ பேக் உள்ளது. மெகா ஆண்டுவிழா சலுகையின் ஒரு பகுதியாக, ரூ.55 மதிப்புள்ள ஜியோடிவி ப்ரோ பேக் 12 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் ஒரு வருடம் முழுவதும் 1000-க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்களை பார்க்க முடியும். இந்த லைவ் டிவி சேனல்களை ஜியோடிவி (JioTV) சேவை மூலமாக மட்டுமே அணுக முடியும். மொபைல் ரீசார்ஜுடன் சேர்த்து லைவ் டிவி சேனல்களையும் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது கூடுதல் நன்மையாக அமைகிறது.

120 ஜிபி கூடுதல் டேட்டா: ஜியோவின் இந்த மெகா ஆண்டுவிழா சலுகையின் கீழ் 120 ஜிபி கூடுதல் டேட்டா பூஸ்டரும் வழங்கப்படுகிறது. அதாவது, 12 மாதங்களுக்கு மாதம் 10 ஜிபி என்ற அடிப்படையில் கூடுதல் டேட்டாவை பெற முடியும். இந்த 120 ஜிபி டேட்டா, திட்டத்துடன் வழங்கப்படும் தினசரி 2.5 ஜிபி டேட்டாவிலிருந்து தனியாக கிடைக்கிறது.

எனவே, தேவையான நேரங்களில் இந்த டேட்டாவை கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் இடம்பெற்றுள்ளது. மெகா ஆண்டுவிழா சலுகையின் கீழ் ஒரு வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை பெற முடியும். இதுதவிர, ஜியோ ரூ.3599 திட்டத்தில் 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது.

இதனால், ஒரே ரீசார்ஜ் மூலம் டெலிகாம் சேவைகளுடன் ஓடிடி மற்றும் ஏஐ சேவைகளையும் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. கூடுதல் சலுகையாக 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இதை ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சேவை மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதலாக ஷாப்பிங் மற்றும் டிராவல் சலுகைகளும்‌ கிடைக்கின்றன.

EaseMyTrip வழியாக விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல, AJIO தளத்தில் ரூ.1,000-க்கும் அதிகமாக ஷாப்பிங் செய்யும் போது ரூ.200 தள்ளுபடி கிடைக்கும். மேலும், Cinepolis வழியாக ரூ.550 மதிப்பிலான இரண்டு டிக்கெட்டுகளை புக் செய்யும் போது ரூ.150 தள்ளுபடியையும் பெற முடியும்.

மொத்தத்தில், 365 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகியவற்றுடன் 1000+ லைவ் டிவி சேனல்கள், ஜியோஹாட்ஸ்டார், கூடுதல் டேட்டா மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைப்பதால், ஜியோ பயனர்களுக்கு இந்த ரூ.3599 திட்டம் கவனிக்கத்தக்க தேர்வாக உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X