30 நாள் வேலிடிட்டி, பல்க் டேட்டா, ஏகபோக இலவசங்கள்.. அதே விலைக்கு Airtel SIM ஓனர்களை கதறவிடும் Jio பிளான்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே - கிட்டத்தட்ட ஒவ்வொரு சேவை பிரிவிலும் நேருக்கு நேர் போட்டியிடும் திட்டங்களை கொண்டுள்ளன.
அப்படியாக இன்று, இவ்விரு நிறுவனங்களுமே ஒரே விலையின் கீழ் வழங்கும் ரூ.355 திட்டத்தை பற்றித்தான் பார்க்க போகிறோம். அதாவது ஜியோவின் ரூ.355 VS ஏர்டெல்லின் ரூ.355-ஐ ஒப்பிட்டு பார்த்து எது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது என்கிற முடிவுக்கு வரப்போகிறோம்.

சுவாரசியமாக இந்த இரண்டு நிறுவனங்களுமே இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய ரூ.355 திட்டங்களை வழங்குகின்றன. ரூ.355 திட்டமானது 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி (30 Days Service Validity) உடன் வருகிறது. சிலருக்கு இது ஒரு விலையுயர்ந்த ரீசார்ஜ் ஆக தெரியலாம்.
இருப்பினும், பெரும்பாலான திட்டங்களை போல தினசரி டேட்டா ஒதுக்கீட்டின் அடிப்படையில் இல்லாமல், இது மொத்தமாக டேட்டாவை பயன்படுத்த அனுமதிக்கிறது. இதை விரும்பும் ஒரு குறிப்பிட்ட வகை வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ரீசார்ஜ் விருப்பமாக உள்ளது இதில் யாருடைய பிளான் சிறந்தது என்பதை புரிந்துகொள்ள, முதலில் ஏர்டெல் மற்றும் ஜியோவின் ரூ.355 திட்டத்தின் நன்மைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.355 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.355 ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இந்த திட்டத்தின் நன்மைகள் - 25ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகும்.
இந்த திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள் - மூன்று மாதங்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் 50ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவைகள் ஆகும். இவற்றுடன், ஜியோ நிறுவனம் ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தா, 5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானோ பனானா போன்றவற்றிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.
பார்தி ஏர்டெல் ரூ.355 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: பார்தி ஏர்டெல்லின் ரூ.355 ப்ரீபெய்ட் திட்டமும் 30 நாட்கள் என்கிற சேவை செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இந்த திட்டத்தின் நன்மைகள் - 25ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள் ஆகும். இந்த திட்டத்துடன் வழங்கப்படும் நன்மை - 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா ஆகும். இந்த சந்தாவின் மதிப்பு ரூ.4,000 ஆகும்.
OPINION: எங்கள் பார்வையில், ஏர்டெல்லின் ரூ.355 திட்டத்தை விட ஜியோவின் ரூ.355 திட்டம் தான் பல வகையான கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. மேலும் ஜியோவின் கூடுதல் நன்மைகள் வெளிப்படையாகவே அதிக மதிப்புடையவைகளாக உள்ளன. ஆக ஏர்டெல் நெட்வொர்க் சேவைகளையோ அல்லது அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவையோ தேடும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஏர்டெல்லின் ரூ.355 ஒரு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஜியோ தொடர்பான மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, ஜியோ நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் 5ஜி சேவைகளை, கூடுதல் சேவையாக வழங்கவும் விரும்புகிறது. ஆனால் இதுவரை அதை செய்யவில்லை. ஏனென்றால் இதற்கான விதிகள்,அதாவது பிரீமியம் 5ஜி சேவைக்கான விதிகள் குறித்த தெளிவு இல்லாமல் தொடங்கினால், இது ஒரு சிக்கலாக மாறக்கூடும்.
கூடவே பாகுபாடு காட்டும் நடைமுறைகள் காரணமாக சட்டச் சிக்கல்களில் சிக்குவதையும் ஜியோ நிறுவனம் விரும்பவில்லை. எனவே ஜியோ நிறுவனமானது ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக, அதாவது டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஒப்புதலுக்காக காத்திருப்பதாக டெலிகாம்டால்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications