Jio கொண்டுவந்த ரூ.355 ப்ரீபெய்ட் திட்டம்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்?
ஜியோ (jio) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.அதேபோல் 25ஜிபி மொத்த டேட்டா கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.355 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 355 prepaid plan) ஆனது மொத்தமாக 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த 25 டேட்டாவை எப்போது வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) போன்ற போன்ற நன்மைகளும் இந்த ஜியோ ரூ.355 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. குறிப்பாக அதிக டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த ஜியோ திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் இந்நிறுவனம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் மூன்று அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்களையும் இங்கே பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 859 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக ஜியோ ரூ.859 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) போன்ற நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) 84 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது. குறிப்பாக தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு 84 நாட்கள் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோகிளவுட் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஜியோ நிறுவனத்தின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ நிறுவனத்தின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.
குறிப்பாக 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.


Click it and Unblock the Notifications








