Home
News

மீண்டும் சலுகையை வழங்கத் தொடங்கிய Jio.. இனி ரூ.349 திட்டத்தை தேர்வு செய்யலாம்.. ஏன்?

ஜியோ நிறுவனம் சமீபத்தில் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது. அதன்பின்பு சில முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களையும் நீக்கி அதிர வைத்தது. சமீபத்தில் ரூ.329, ரூ.949 மற்றும் ரூ.1049 ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி வழங்கி உள்ளது.

அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி தான் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சலுகையை வழங்கத் தொடங்கிய ஜியோ.. இனி ரூ.349 திட்டத்தை தேர்வு செய்யலாம்

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 prepaid recharge plan) ஆனது முன்பு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தைத் திருத்தியுள்ளது ஜியோ நிறுவனம். அதாவது ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது இனிமேல் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் 30-நாள் வேலிடிட்டி மாற்றம் இன்னும் ஜியோ இணையதளத்தில் பிரதிபலிக்கவில்லை,ஆனால் விரைவில் 30 நாட்கள் வேலிடிட்டி ஆக மாறும் என்று 91mobiles இணையதளம் தெரிவித்துள்ளது. மேலும் ஜியோ சமீபத்தில் அறிமுகம் செய்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

சலுகையை வழங்கத் தொடங்கிய ஜியோ.. இனி ரூ.349 திட்டத்தை தேர்வு செய்யலாம்

ஜியோ ரூ.329 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 329 prepaid recharge plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 42ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஜியோ ரூ.329 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் மேலும் ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro), ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) வழங்குகிறது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சலுகையை வழங்கத் தொடங்கிய ஜியோ.. இனி ரூ.349 திட்டத்தை தேர்வு செய்யலாம்

ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 சந்தா வழங்கும் இந்த திட்டம்.

குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

source: 91mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 349 prepaid plan will now offer 30 days validity:check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X