Home
News

Jio க்கு போட்டியே இல்ல.. ரூ.349 க்கு சகலமும் இருக்கு.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா.. எஸ்எம்எஸ்.. எது பெஸ்ட்?

ஜியோ (Jio) நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் (Postpaid) கஸ்டமர்களுக்கு ரூ.349 விலைக்கு ஒரு திட்டம் கிடைக்கிறது. அதேபோல ப்ரீபெய்ட் (Prepaid) கஸ்டமர்களுக்கும் ரூ.349 விலைக்கு ஒரு திட்டம் கிடைக்கிறது. ஒரே விலையில் கிடைப்பதால், அந்த திட்டங்களின் சலுகைகளை ஒப்பிட்டு பார்க்கலாம். எதில் அதிக சலுகைகள் கிடைக்கிறது என்பதை கஸ்டமர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.349 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள்

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு பில் சைக்கிள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கு ஒரு முறை பில் செலுத்தி கொள்ளலாம். இந்த நாட்களில் 30 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். பிறகு 1 ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கப்படும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. போஸ்ட் டேட்டா மட்டும் கிடைக்காது.

Jio க்கு போட்டியே இல்ல.. ரூ.349 க்கு சகலமும் இருக்கு.. வாய்ஸ் கால்கள்!

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் (Unlimited Local, STD, Roaming Voice) கால்களின் சலுகையை கொடுத்து உள்ளது. தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்ப முடியும். ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் கிடைக்கிறது. இதில் 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா கிடைக்கும். 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கும்படி ஜியோ ஏஐ கிளவுட் அணுகல் கிடைக்கும்.

ஜெமினி ப்ரோ சந்தாவை பெற்று கொள்ளலாம். ரூ.35,100 மதிப்புள்ள இந்த சந்தா 18 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும். இதில் ஃபேமிலி சிம் கார்டுகளை இணைக்க முடியாது. தனிநபர்களுக்கு கிடைக்கும் திட்டமாகவே இருக்கிறது. இதைவிட டேட்டாவில் கூடுதல் சலுகைகளுடன் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள்

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா (Daily 2GB Data) வீதம் 56 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையையும் இந்த திட்டம் கொடுத்து உள்ளது.

மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கிடைக்கிறது. ஜியோ ஸ்பெஷல் ஆஃபரானது இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் கிடைக்கிறது. ஆகவே, 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி (JioHotstar Mobile / TV) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது.

50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கும்படி ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) அணுகல் கிடைக்கிறது. ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஜியோஹாட்ஸ்டார் 3 மாதங்களுக்கு கிடைக்கும்.

மேலும், ஜெமினி ப்ரோ சந்தாவை தொடர்ந்து பெறுவதற்கு குறைந்தபட்சம் ரூ.349 விலைக்கு கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதற்கு கீழ் விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஜெமினி ப்ரோ சந்தா தொடர்ந்து கிடைக்காது. ஏனென்றால், இதன் மதிப்பு ரூ.35,100ஆக இருக்கிறது. ஆகவே, சில விதிமுறைகளுடன் கிடைக்கிறது.

எதில் சலுகைகள் அதிகம்?

டேட்டா சலுகையில் போஸ்ட்பெய்ட் திட்டத்தைவிட ப்ரீபெய்ட் திட்டம் அதிக சலுகைகளை கொடுத்து உள்ளது. அதேபோல போஸ்ட் டேட்டா சலுகையானது, ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற சலுகைகள் எல்லாம், ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டமே சலுகைகளை அதிகமாக கொடுத்து உள்ளது. மற்ற திட்டங்களில் அப்படியில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Prepaid Plan Vs Jio Rs 349 Postpaid Plan Unlimited Voice Calls Data SMS Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X