Home
News

ஒரே Jio ரீசார்ஜ்.. அடுத்த 28 நாட்களுக்கு செட்டில்மெண்ட்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, ஓடிடி சந்தா!

ஜியோ நிறுவனத்தில் ப்ரீபெய்ட் கஸ்டமர்களாக இருக்கும் நபர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படி ஒரு திட்டம் இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் பெஸ்ட் ஆப்ஷனாக இது இருக்கிறது. இதில் கிடைக்காத சலுகைகளே கிடையாது. அதிகப்படியான சலுகைகளை 28 நாட்களுக்கு கொடுத்து இருக்கிறது.

இந்த திட்டமானது, ரூ.349 விலைக்கு கிடைக்கிறது. இது கொஞ்சம் அதிக விலை கொண்ட திட்டம் போல தோன்றலாம். ஆனால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொண்ட ஆரம்ப விலை திட்டமாக இது இருக்கிறது. இதுபோக 4ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், ஓடிடி சந்தா மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் சலுகைகளை கொடுக்கிறது.

ஒரே Jio ரீசார்ஜ்.. அடுத்த 28 நாட்களுக்கு செட்டில்மெண்ட்.. அன்லிமிடெட்!

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid Plan): ட்ரூ 5ஜி அன்லிமிடெட் திட்டங்கள் (True 5G Unlimited Plans) பிரிவின் கீழ் இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

இது 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும் டேட்டாவாக இருக்கிறது. ஆகவே, இதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, டேட்டாவை பொறுத்தவரையில், 5ஜி கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், 4ஜி கஸ்டமர்களுக்கும் ஏற்றபடி கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) செய்து கொள்ள முடியும்.

ஆகவே, லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். டேட்டாவை போலவே தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த வழக்கமாக சலுகைகளே பட்டையை கிளப்பும்படி இருக்கின்றன. ஆனால், இதில் கூடுதலாக ஏகப்பட்ட சலுகைகள் பேக் செய்யப்பட்டுள்ளன.

இதில் கிடைக்கும் அதிக டேட்டாவுக்கு ஏற்ப ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி முந்த பிறகு அடுத்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதில் மாதாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே ஓடிடி தொடர்ந்து கிடைக்கும்.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தவுடன் மொபைல் நம்பருக்கு ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும். ஆகவே, மொபைல் நம்பரை லாகின் செய்து, ஓடிடி சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையை இதில் பயன்படுத்தி கொள்ளலாம். 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கும் சலுகையாக இது இருக்கிறது.

இறுதியாக கூகுள் நிறுவத்தின் பிரீமியம் ஏஐ சந்தாவான ஜெமினி ப்ரோ (Gemini Pro) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, ஒரு வருடத்துக்கு மேல் சந்தாவை கொடுக்கிறது. பிரீமியம் சந்தாவாக இருப்பதால், 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். நானோ பனானா (Nano Banana) உள்ளிட் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Prepaid Plan Best Option Among Plans With 28 Day Validity Offering Most Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X