Jio ஒரே போடு.. ஆரம்ப விலையே ரூ.349-தான்.. ஆனால், வாய்ஸ் கால்கள்.. 90 நாட்கள் ஓடிடி சந்தா.. 5ஜி டேட்டா!
ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு ரூ.349 ஆரம்ப விலை கொண்ட திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், 90 நாட்களுக்கு ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் குறிப்பிட்ட கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இது ஜியோ போஸ்ட்பெய்ட் (Jio Postpaid) கஸ்டமர்களுக்கு கிடைக்கும் ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. இதில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் மட்டுமே கிடைத்தது. ஆனால், ஜியோ அன்லிமிடெட் ஆஃபர் (Jio Unlimited Offer) இதற்கும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, ஓடிடி மற்றும் கிளவுட் டேட்டா சலுகைகளை பெற முடியும்.

ஜியோ ரூ 349 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 349 Postpaid Plan): உங்களிடம் ஜியோ போஸ்ட்பெய்ட் சிம் கார்டு இருந்தால், அதில் குறைந்தபட்ச விலைக்கு திட்டத்தை பெற விரும்பினால், இது மட்டுமே ஆப்ஷாக இருக்கிறது. இதுவொரு தனிநபர் போஸ்ட்பெய்ட் திட்டமாக இருக்கிறது. அதாவது, போஸ்பெய்ட் திட்டங்களில் ஃபேமிலி சிம் கார்டுகளை இணைக்க முடியும்.
ஆனால், இதில் அந்த சலுகை கிடையாது. இதற்கு அடுத்து கிடைக்கும் ஜியோ ரூ 449 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இருந்து மட்டுமே ஃபேமிலி சிம் கார்டு இணைப்பு சலுகை தொடங்குகிறது. இதை தெரிந்து கொண்டு திட்டத்தை பெற்று கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் ஒரு பில் சைக்கிளுக்கு 30 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். அதற்கு பிறகு 1 ஜிபிக்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.
இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இந்த திட்டம் கொடுப்பதால், கஸ்டமர்களுக்கு 30 ஜிபிக்கு மேலும் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகைகள் கிடைக்கிறது.
இந்த வழக்கமான சலுகைகளுக்கு பிறகு ஜியோ அன்லிமிடெட் ஆஃபரின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஸ்டோரேஜ் சலுகைகள் கிடைக்கின்றன. இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மட்டும், பில் சைக்கிளைவிட கூடுதலாக கிடைக்கும். அதாவது, 90 நாட்களுக்கு இந்த சந்தாவை பயன்படுத்த முடியும்.
ஆகவே, ஒரு பில் சைக்கிள் முடிந்தவுடன் அடுத்த பில் சைக்கிளுக்கு கஸ்டமர்கள் கட்டணம் செலுத்தி மாறினால் மட்டுமே ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தாவை முழுவதும் பயன்படுத்த முடியும். அதேபோல ஜியோ ஏஐ கிளவுட் சலுகையில் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் சலுகை மட்டுமே கொடுக்கப்படும். அதுவும் ஜியோ நம்பரில் இருந்து மட்டுமே இதை பெற்று கொள்ள முடியும்.
இந்த சலுகைகள் மட்டுமே ஆரம்ப விலை போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. உங்களுக்கு ஃபேமிலி சிம் கார்டை இணைக்க வேண்டுமானால், ரூ 449 திட்டத்தை பெற்று கொள்ளுங்கள். ஆனால், கூடுலாக இணைக்கும் ஒரு சிம் கார்டுக்கு ரூ 150 கட்டணம் இருக்கும். இப்படி 3 சிம் கார்டுகளை அதிகபட்சம் இணைத்து கொள்ளலாம். இந்த சிம் கார்டுகளுக்கு குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும்.
அதாவது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் ஒரு பில் சைக்கிள் முழுவதுக்கும் 5 ஜிபி டேட்டா கிடைக்கும். பிரைமரி சிம் கார்டுக்கு 75 ஜிபி டேட்டாவை கொடுக்கும். இந்த போஸ்பெய்ட் திட்டத்துக்கும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல், ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். ஆனால், இதை பிரைமரி சிம் கார்டில் மட்டுமே பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








