Home
News

ரூ.350 க்கு ரூ.35100.. அள்ளி கொடுக்குறதுனா இதுதானா அம்பானி சார்.. Jio யூசர்கள் காட்டில் மழை!

வெறும் ரூ.350 க்கு போதும் போதும் என்கிற அளவுக்கு டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ஓடிடி நன்மைகளை வழங்கிவிட்டு.. போதாக்குறைக்கு ரூ.35,100 மதிப்புள்ள நன்மையையும் கொடுத்தால்.. அள்ளி கொடுக்கும் அம்பானி என்று கூறாமல்.. என்னவென்று கூறுவது? அது என்ன ஜியோ திட்டம்?

அது ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஆகும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம், அதாவது சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை ரூ.349-ன் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டா என மொத்தம் 56 ஜிபி டேட்டா கிடைக்கும். கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளும் கிடைக்கும்.

Jio யூசர்கள் காட்டில் மழை.. ரூ.350 க்கு ரூ.35100!

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோ சிறப்பு சலுகையின் கீழ், புதிய ஜியோஹோம் கனெக்ஷனுக்கு 2 மாத இலவச சோதனை அணுக கிடைக்கும். இதோடு ஜியோ ஏஐ கிளவுட் சேவையின் கீழ் 50ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடைக்கு. தகுதியுள்ள சந்தாதாரர்களுக்கு (5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் அவசியம்) அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கும்.

4ஜி சேவையின் கீழ் டெய்லி டேட்டா லிமிட் (2ஜிபி டேட்டா) தீர்ந்த பின்னர் 64 கேபிபிஎஸ் என்கிற ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டாவும் கிடைக்கும். ஓடிடி நன்மையை பொறுத்தவரை ஜியோ ஹாட்ஸ்டார் சேவைக்கான மொபைல் / டிவி சந்தா 3 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

ஜியோஹாட்ஸ்டார் சந்தாவானது ஜியோ மாதாந்திர திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள், தங்கள் 2வது மற்றும் 3வது மாத ஜியோஹாட்ஸ்டார் நன்மையை பெற, ஆக்டிவ் பிளான் காலாவதியான 48 மணி நேரத்திற்குள் தங்கள் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் பயனர்கள் அதே ஜியோ எண்ணுடன் ஜியோஹாட்ஸ்டார் / ஜியோஏஐகிளவுடில் லாக்இன்செய்ய வேண்டும்.

கடைசியாக மற்றும் முக்கியாமான ரூ.35,100 மதிப்புள்ள இலவசமும் ரூ.349 திட்டத்தின் கீழ் கிடைக்கும். அதாவது ரூ.349-ன் கீழ் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஜியோ பயனர்களுக்கு ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினியின் 18 மாத இலவச ப்ரோ திட்டம் இலவசமாக கிடைக்கும்.

இதேபோன்ற நன்மைகள் ரூ.3599 ரீசார்ஜ் திட்டத்திலும் கிடைக்கும். இதை 12 மாதங்களுக்கு பிரித்தால் மாதாந்திர ரூ.299 என்கிற செலவின் கீழ் உங்களுக்கு 1 ஆண்டு / 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். அதாவது நீங்கள் இப்போது ரீசார்ஜ் செய்தால் 2026 ஆம் ஆண்டு முழுவதுமாக உங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும்.

நன்மைகளை பொறுத்தவரை ரூ.3599 திட்டம் ஆனது தினமும் 2.5 ஜிபி டேட்டா (Daily 2.5G Data) என மொத்தம் 912.5 அளவிலான டேட்டா (Total of 912.5GB Data), டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Daily 100 SMS) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice calls) ஆகிய நன்மைகளை 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவர, ஜியோ ஸ்பெஷல் ஆபரின் (Jio Special Offer) கீழ், புதிய கனெக்ஷனுக்கு 2 மாத இலவச ஜியோ ஹோம் சோதனை (2 Months Free Jio Home Test) கிடைக்கும், மேலும் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா (Jio Hotstar Mobile / TV Subscription) 3 மாதங்களுக்கு கிடைக்கும்.

இதோடு ஜியோ ஏஐ கிளவுட் (இலவச 50 ஜிபி ஸ்டோரேஜ்) நன்மையும் கிடைக்கும். எல்லாவற்றை விட முக்கியமாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினியின் 18 மாத இலவச ப்ரோ திட்டமும் (Google Gemini Pro Plan)கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Plan With Free Google Gemini AI Pro Subscription Worth Rs 35100
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X