Home
News

அதான் அம்பானி.. 28 நாட்களுக்கு ரூ.280 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு நாள்தோறும் 2.5 டேட்டா (Daily 2.5GB Data) வேண்டுமானால், அவர்களுக்கு ஒரேவொரு ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே 30 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. அதற்கு அடுத்து 365 நாட்கள் வேலிடிட்டியை கொண்ட திட்டங்கள் மட்டுமே கிடைக்கின்றன. இந்த 30 நாட்கள் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் வருகிறது. அதேபோல வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையையும் கொண்டிருக்கிறது இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோவில் 1 ஜிபி, 1.5 ஜிபி, 2 ஜிபி. 2.5 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், 2.5 ஜிபி டேட்டா திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியில் ஒரேவொரு திட்டம் மட்டுமே இருக்கிறது. மற்ற திட்டங்களில் 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையில் திட்டங்கள் இருக்கின்றன. ஆகவே, 2.5 ஜிபி டேட்டா வேண்டுமானால், கீழ் வரும் திட்டம் மட்டுமே இருக்கிறது.

அதான் அம்பானி.. 28 நாட்களுக்கு ரூ.280 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ ரூ 349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டாவை பற்றிய கவலையே இருக்காது. ஏனென்றால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 75 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் வருகிறது.

இந்த சலுகைகள் போக வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபோக தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும், ஜியோசினிமா (JioCinema) ஆப்பை பயன்படுத்தலாம். ஆனால், பிரீமியம் சந்தா கிடைக்காது.

அதேபோல ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆப்களையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வேண்டுமானால், இந்த திட்டத்தை மட்டுமே குறைவான வேலிடிட்டியில் தேர்ந்தெடுக்க முடியும். இல்லையென்றால், 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2999 திட்டம் மட்டுமே அடுத்தபடியாக இருக்கிறது.

ஜியோ ரூ 2999 திட்ட விவரங்கள் (Jio Rs 2999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை வருகிறது. ஆகவே, இந்த வருடாந்திர திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 912.5 ஜிபி டேட்டாவை மொத்தமாக பயன்படுத்தலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் டேட்டா சலுகையை பெற முடியும். ஆனால், 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்யலாம்.

இதுபோக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் சலுகை வருகிறது. முந்தை திட்டத்தை போல ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் ஆப்களின் சலுகை வருகிறது. இந்த திட்டத்துக்கான 28 நாட்களுக்கு செலவை பார்த்தால் ரூ.230ஆக மட்டுமே இருக்கிறது. ஆகவே, வருடாந்திர திட்டத்தில் கூடுதல் லாபம் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Plan With 30 Days Validity, Unlimited Voice Calls, 75GB Data Check Unlimited 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X