Home
News

அது இல்ல.. இதுதான் நியூ இயர் ஆஃபர்.. ரூ.349 விலைக்கு மொத்தமும் முடிந்தது.. குஷியில் Jio கஸ்டமர்கள்!

ஜியோ கஸ்டமர்களுக்கு 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு 3 திட்டங்கள் களமிறக்கப்பட்டன. ஆனால், வாய்ஸ் கால்களுடன் அந்த சலுகையை பெறுவதற்கு குறைந்தது ரூ.500 ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், அதற்கு துளியும் குறையில்லாத சலுகைகள் ரூ.349 விலை கொண்ட திட்டத்திலேயே கிடைக்கின்றன. வாய்ஸ் கால்களுடன், டேட்டா, ஓடிடி, ஜியோஹோம் போன்ற சலுகைகள் வருகின்றன.

இந்த திட்டம் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கும். ஆனால், ஓடிடி சந்தாவானது 3 மாதங்கள் கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். ஜியோ கோல்டு சலுகை கிடைக்கும். ஏஐ கிளவுட் மற்றும் ஜெமினி ப்ரோ சந்தாவும் கிடைக்கும். இப்படி சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அது இல்ல.. இதுதான் நியூ இயர் ஆஃபர்.. ரூ.349 விலைக்கு மொத்தமும் வருது!

ஜியோ ரூ.349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை இந்த வேலிடிட்டி நாட்கள் முழுவதும் கொடுக்கிறது. 2 ஜிபி டேட்டாவை தினமும் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இது முடிந்தால் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

இந்த போஸ்ட் டேட்டாவை 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. டேட்டாவை போலவே 100 எஸ்எம்எஸ்கள் தினமும் அனுப்பி கொள்ள கிடைக்கிறது. இந்த சலுகைகளுடன் ஜியோ டிவி (Jio TV) ஆப் பயன்படுத்த கிடைக்கிறது.

இந்த சலுகைகள் மட்டும் வழக்கமாக கிடைக்கிறது. ஆனால், கூடுதல் சலுகைகளாக ஓடிடி, ஃபைபர் டேட்டா, கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஏஐ சாட்பாட் போன்றவை கொடுக்கப்படுகின்றன. இந்த சலுகைகளின் மதிப்பு திட்டத்தைவிட அதிக விலை கொண்டதாக இருக்கின்றன. டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு அடுத்து ஓடிடி சந்தா கிடைக்கிறது.

ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை பயன்படுத்தலாம். இதை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்த முடியும். ஆகவே, திட்டத்துக்கு வெறும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைப்பதால், அது முடிந்தவுடன் அடுத்த ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் மூன்று மாதங்கள் முழுவதும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த ஓடிடி சலுகை மட்டுமல்லாமல், கூடுதல் ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கும்படி ஜியோஹோம் (JioHome) சலுகை கிடைக்கிறது. இதை 2 மாதங்களுக்கு ட்ரையல் போல கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அதற்கு பிறகு கட்டணம் இருக்கும். இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்க வாய்ப்புள்ளது. இதில் ஃபைபர் டேட்டா கிடைக்கும்.

மேலும், வை-பை வாய்ஸ் காலிங் சலுகை, ஓடிடி சலுகை மற்றும் லைவ் டிவி சேனல்களின் சலுகை கிடைக்கும். அதாவது, ஜியோ ஃபைபர் திட்டங்களில் கிடைக்கும் ஒட்டுமொத்த சலுகையும் இதற்கும் கொடுக்கப்படும். ஜியோ கோல்டு (Jio Gold) கொடுக்கப்படுகிறது. அதாவது, ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance) ஆப் வழியாக ஜியோ கோல்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.10 முதல் இந்த கோல்டு டிஜிட்டலாக கிடைக்கிறது. இப்படி வாங்கப்படும் கோல்டின் கணக்கில் 1 சதவீதம் இலவமாக கொடுக்கப்படும். மேலும், ஜியோ ஏஐ கிளவுட் சலுகை வழியாக 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த மொத்த சலுகைகளும் போக ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவானது 18 மாதங்களுக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Plan With 2GB Daily Data 28 Days Validity JioHotstar OTT Check Gemini Pro Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X