Home
News

Airtel, Vi-ஐ முடித்த Jio.. ரூ.349 க்கு 12 மாதங்களுக்கு சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 12 மாதங்களுக்கு கேன்வா ப்ரோ லைட் சந்தா, 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் ஓடிடி சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

Airtel, Vi-ஐ முடித்த Jio.. ரூ.349 க்கு 12 மாதங்களுக்கு சந்தா!

ஆகவே, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த திட்டத்தை 48 மணி நேரத்துக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த கேன்வா ப்ரோ லைட் சந்தாவை 12 மாதங்களுக்கும், ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும். அதிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தையே தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ரூ.349 விலை கொண்ட இதே திட்டத்தை வேலிடிட்டி முடிய முடிய ரீசார்ஜ் செய்து வந்தால், தொடர்ந்து இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் போக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சந்தாவை ரீசார்ஜ் செய்யப்பட்ட மொபைல் நம்பரை வைத்து மட்டுமே பெற முடியும்.

ரீசார்ஜ் செய்யப்பட்ட உடன் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி ஆப்பை டவுன்லோட் செய்து ஜியோ மொபைல் நம்பரை கொடுத்து லாகின் செய்தால் போதும், ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும். இதற்கு அடுத்து ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இதையும் ஜியோ மொபைல் நம்பரை வைத்து மட்டுமே லாகின் செய்து பெற்று கொள்ள முடியும்.

இப்படி லாகின் செய்தால், 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இந்த சலுகைகள் எல்லாமே கூடுதல் சலுகைகளாக மட்டுமே இருக்கின்றன. இந்த ஜியோ ரூ.349 திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படும். 28 நாட்கள் முழுவதும் பயன்படுத்தலாம்.

ஒருவேளை 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா கிடைத்தால், மொத்தமாக 56 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இருக்க முடியும். 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. இதை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த ஜியோ ரூ.349 திட்டத்துக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் அனுப்பி கொள்ளலாம். இந்த ஒட்டுமொத்த சலுகைகளும் ரூ.349 விலைக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஓடிடி, வாய்ஸ், டேட்டா, ஏஐ உள்ளிட்ட சலுகைகளுக்கு நல்ல ஆப்ஷனாகும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Plan With 28 Days Validity Voice Calls 2GB Data Including 12 Month Canva Pro Lite
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X