Jio சிம் இருக்கா? இந்த மலிவு விலை திட்டத்தை ட்ரை செய்யுங்க.. தினமும் 2GB டேட்டா.. அமோக நன்மை.. எந்த பிளான்?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்காக தற்போது பல புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (prepaid recharge plan) அறிமுகம் செய்து வருகிறது. இதில் புதிய சேர்ப்பாக ஜியோ (Jio) நிறுவனம் ரூ. 349 பிளான் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் ஒரு டீசெண்டான ரீசார்ஜ் திட்டத்தை தேடும் நபர்களுக்குக்கும், பட்ஜெட் விலையில் ஒரு நியாயமான ப்ரீபெய்ட் திட்டத்தை தேடும் நபர்களுக்காகவே ஜியோ இந்த புதிய திட்டத்தை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நன்மை என்ன? இதன் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
ஜியோவின் நிலை தற்போது கொஞ்சம் மோசமாக உள்ளது. சமீபத்தில் நிறுவனம் நடைமுறைப்படுத்திய விலை உயர்வுக்கு பிறகு, ஜியோவின் பக்கம் கூட்டம் குறைந்துள்ளது. ஜியோவின் கடுமையான விலை ஏற்றத்தை கண்டித்து 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்கை விட்டு வெளியேறியுள்ளனர் என்று கணக்கெடுப்பு காண்பிக்கிறது.

Jio சிம் இருக்கா? இந்த மலிவு விலை திட்டத்தை ட்ரை செய்யுங்க:
இதை சரி செய்ய, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டம் தான் ஜியோ ரூ. 349 திட்டம் (Jio Rs 349 Plan). இந்த திட்டம் பட்ஜெட் பிரியர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோவின் விலை ஏற்றதால் மலிவான ப்ரீபெய்ட் திட்டம் ஜியோவிடம் இல்லை என்று கருதி, ஜியோ நெட்வொர்க்கை புறக்கணித்து சென்ற தனது பழைய வாடிக்கையாளர்களை தன் வசம் இழுக்கும் நோக்கத்தில், ஜியோ நிறுவனம் இந்த புதிய ஜியோ ரூ. 349 திட்டம் (Jio Rs 349 Plan) என்ற ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ ரூ. 349 பிளான் (Jio Rs 349 Plan):
இந்த புதிய ஜியோ ரூ. 349 பிளான் (Jio Rs 349 Plan) தற்போது ஜியோவின் அணைத்து வட்டங்களிலும் கிடைக்கும் படி நிறுவனம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் நிறுவனம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். ஜியோ ரூ. 349 திட்டம் (Jio Rs 349 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.
ஆம், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு மொத்தமாக 56GB டேட்டா நன்மையை வழங்கி ஜியோ வாடிக்கையாளர்களின் டேட்டா தேவையை தினசரி போதுமான அளவில் பூர்த்தி செய்கிறது. இந்த திட்டம் தினசரி 100 SMS நன்மையுடனும் வருகிறது.
இத்துடன் கூடுதல் நன்மையாக இந்த திட்டம் ஜியோவின் இலவச சந்தா நன்மைகளையும் சேர்த்து வழங்குகிறது. இதில் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய நன்மைகளை சேர்த்து வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








